பலவிதங்களில் பல்வேறு பெயர்களில் கிடைக்கும் காளான்கள் காய்கறி வகையில் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. இதனை உலக மக்கள் தங்களது உணவில் சேர்த்து கொண்டுள்ளனர். உண்மையில் இது ஒருவகை பூஞ்சை ஆகும்.
ஹார்வார்டு டி.ஹெச். சான் பொதுநல ஆரோக்கிய நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி காளான்களில் குறைந்த அளவு கலோரிகள் மற்றும் கொழுப்பு இருக்கிறது. மேலும் எளிதில் செரிமானம் ஆகக்கூடிய ஏராளமான பைபர் நிறைந்துள்ளது.
இதுதவிர புரோடீன், வைட்டமின் சி, வைட்டமின் பி, வைட்டமின் டி, காப்பர், பொட்டாசியம், பாஸ்பரஸ், செலினியம், பைடோகெமிக்கல் மற்றும் ஆண்டி ஆக்சிடண்ட்கள் நிறைந்துள்ளன. இதில் புற்று நோய் பாதிப்பை சரி செய்யும் தன்மைகளும் நிறைந்துள்ளன.
நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவது
அதிகளவு நியூட்ரியன்ட்கள் நிறைந்து இருப்பதால், காளான்களை சமைக்காமல் உண்ணும் போது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெறும். காளான்களில் உள்ள நன்மை விளைவிக்கும் தன்மைகள் காலநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் நோய்கள் வராமல் தடுக்கும். மேலும் உடல் எடை கூடாமல் இருப்பது மற்றும் உடல் பருமன் ஏற்படாமல் தடுப்பதிலும் காளான்கள் சிறந்து செயலாற்றுகின்றன.
இதய பிரச்சினை
காளான்களில் உள்ள புரோடீன்கள் மற்றும் குறைந்த அளவு கலோரி மற்றும் கொழுப்புக்கள் உடலின் இதய பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கிறது. இதில் அதிகளவு உப்பு நிறைந்து இருப்பதால் சமைக்கும் போது இதில் மிகவும் சிறிதளவு உப்பு சேர்த்து கொண்டாலே போதுமானது.
அறிவாற்றல் செயல்பாடு
எர்கோதைனின் மற்றும் குளோடதியோன் போன்ற ஆண்டி ஆக்சிடண்ட்கள் காளான்களில் அதிகளவு நிறைந்துள்ளது. இவை வயதீனத்தை குறைப்பதோடு மூளை செல்களில் ஆரோக்கிய நன்மையை ஏற்படுத்தும் தன்மை கொண்டுள்ளது. காளான்களை சாப்பிடும் போது நினைவாற்றல் மற்றும் கவனம் செலுத்தும் திறன் அதிகரிக்கும்.
எலும்புகளின் ஆரோக்கியம்
காளான்களில் வைட்டமின் டி, கால்சியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவை நிறைந்துள்ளன. இவை எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தன்மை கொண்டுள்ளன. அன்றாட உணவில் தொடர்ந்து காளான்களை சேர்த்துக் கொண்டால் எலும்பு சார்ந்த குறைபாடுகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.
செரிமான கோளாறு
காளான்களில் உள்ள பாலிசேக்ரைடுகள் எனும் நியூட்ரியன்ட்கள் பிரீபயோடிக் போன்று செயல்படுகின்றன. பிரீபயோடிக் காம்பவுண்ட்கள் உடலில் நன்மையை ஏற்படுத்தும் நுண்ணுயிரி மற்றும் பூஞ்சைகளின் வளர்ச்சிக்கு வழி செய்கிறது. இதனால் காளான்களை சாப்பிடும் போது செரிமான மண்டலம் சீராக இயங்க துவங்கும். இதனால் செரிமான கோளாறுகள் சரி செய்யப்பட்டு விடும்.