இன்றைய காலத்தில் செல்போன்களை போலவே லேப்டாப் அதாவது மடிக்கணினியும் தவிர்க்க முடியாத சாதனமாக மாறிவிட்டது. செல்போன்கள் அடிக்கடி கோளாறாவதை போலவே பலரின் மடிக்கணினியும் கோளாறை ஏற்படுத்துகிறது.
மடிக்கணினி அடிக்கடி சிக்கலுக்கு ஆளாவதற்கு நாம் அதை பயன்படுத்தும் முறையும் ஒரு காரணம் ஆகும். மடிக்கணினியை எப்படி எல்லாம் பயன்படுத்தக்கூடாது என்பதை கீழே பார்க்கலாமா?
- எப்போதும் சார்ஜருடன் லேப்டாப்பை தொடர்ந்து இணைத்திருக்க கூடாது. இது உடனடியாக பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும் நாளடைவில் மோசமான பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
- லேப்டாப்பை திறக்கும் போது ஒரு பக்கத்தில் இருந்து திறக்கக்கூடாது, நடுவில் கை வைத்து தான் திறக்க வேண்டும்.
- சிலருக்கு ஏதாவது நொறுக்கு தீனிகளை சாப்பிட்டுவிட்டு அதே கையில் மடிக்கணினியில் கை வைப்பார்கள். இது மிகவும் தவறான செயல்.
- இதனால், லேப்டாப்பின் பேட் மற்றும் விசைப்பலகை மீது படும் எண்ணெய் சாதனத்தின் உள்ளே செல்லும் அபாயம் உள்ளது.
- லேப்டாப்பை எப்போதும் பாதுகாப்பான முறையில் பயணம் செய்யும்போது எடுத்துச் செல்ல வேண்டும்.
- மடிக்கணினியில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போதே ஏதாவது அவசர வேலையாக சென்றால், மடிக்கணினியை ஹைபர்னேட் நிலையில் வைத்திருங்கள். இது மின்சார பயன்பாட்டை குறைத்து, அதிக ஆயுளை தரும்.
- 8 மணி நேரத்திற்கு மேல் தொடர்ச்சியாக மடிக்கணினி இயங்கினால் லேப்டாப் அதிக சூடாகும். இதனால், மடிக்கணினியின் செயல்பாட்டின் வேகமும் குறைந்து விடும். பயன்படுத்திய பிறகு மறக்காமல் ஷட்டவுன் செய்யவும்.
- மடிக்கணினியை ப்ரஷ் ஒன்றை பயன்படுத்தி தூசியை சுத்தப்படுத்துங்கள். மெல்லிய துணியை பயன்படுத்தி திரையை துடைக்கவும்.
மேற்கண்டவற்றை முறையாக பின்பற்றினால் உங்கள் மடிக்கணினியின் ஆயுட்காலம் நீடிக்கும்.
ALSO READ | PF Withdrawal: ஆன்லைன் மூலமாக PF பணத்தை எப்படி எடுப்பது? கத்துக்கோங்க..!