சிபில் ஸ்கோர் (CIBIL Score)… தனிநபர்களிடமிருந்து கடன் விண்ணப்பத்தைப் பெறும்போது ஒவ்வொரு நிதி நிறுவனமும் சரிபார்க்கும் மிக முக்கியமான காரணிகளில் சிபில் மதிப்பெண்ணும் ஒன்றாகும்.
டிரான்ஸ்யூனியன் சிபில்(TransUnion CIBIL) மில்லியன் கணக்கான தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் கடன் தகுதியைக் கண்டறிய கிட்டத்தட்ட ஒவ்வொரு வங்கியுடனும் தொடர்பு வைத்துள்ளது.
அதிக சிபில் ஸ்கோர் உங்கள் சிறந்த நிதி ஒழுக்கத்தை மட்டுமல்ல, உங்கள் நேர்மையையும் குறிக்கிறது. ஒவ்வொரு முறையும் நீங்கள் கடன் அல்லது கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது, உங்கள் சமீபத்திய மதிப்பெண்ணை (கடந்த ஆறு மாதங்கள்) சரிபார்க்கப்படுகிறது. பொதுவாக, 700 க்கு மேல் உள்ள எந்த மதிப்பெண்ணும் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
சிபில் ஸ்கோரை எப்படி தெரிந்துகொள்வது:
STEP 1: இலவசமாக சிபில் ரிப்போர்ட்டை பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
STEP 2: ‘GET FREE CREDIT REPORT’ என்பதற்கு கீழ் கேட்கப்படும் தகவல்களை பூர்த்தி செய்யவும்.
STEP 3: உங்கள் மொபைல் எண்ணிற்கு வந்திருக்கும் OTP ஐ டைப் செய்த பின்னர் ‘GET FREE REPORT’ பட்டனை கிளிக் செய்யவும்.
அடுத்த பக்கத்தில் உங்களுடைய சிபில் மதிப்பெண் காண்பிக்கப்படும். உங்களுடைய கிரெடிட் கார்டு, பர்சனல் லோன், செலுத்த வேண்டிய பாக்கி தொகை போன்ற விவரங்களையும் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
‘View Detailed Credit Report’ யை கிளிக் செய்து கிரெடிட் ரிப்போர்ட்டை PDF வடிவத்தில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
சிபில் ஸ்கோர்:
சிபில் மதிப்பெண் | என்ன சொல்கிறது |
850-900 | சிறந்த மதிப்பெண். நீங்கள் ஒருபோதும் கடன்/ தவணைகளை செலுத்த தவறியதில்லை என்பதை காட்டுகிறது |
750-850 | இந்த மதிப்பெண் உடையவர்கள் எளிதாக வங்கியிடம் இருந்து கடன்களை பெறலாம். |
700-750 | இந்த மதிப்பெண் கொண்டவர்கள் Secured Loan பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். அதாவது கார் லோன், நகை கடன் போன்றவை. பர்சனல் லோன், கிரெடிட் கார்டு லோன் போன்ற Unsecured Loan யை பெறுவது கடினம். |
500-700 | கடன்/ தவணைகளை சில முறை தாமதப்படுத்தியிருக்கிறீர்கள் அல்லது தவறிவிட்டீர்கள் என்பதை இது காட்டுகிறது. பர்சனல் லோன் போன்ற unsecured loanயை வங்கியில் இருந்து பெறுவது கடினம். |
300-500 | இது மோசமான மதிப்பெண். இந்த மதிப்பெண் நீங்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்துதலில் பல முரண்பாடுகளைக் குறிக்கிறது. இந்த சிபில் ஸ்கோர் உடையவர்கள் நாட்டின் எந்தவொரு வங்கியிடமிருந்தும் கடன் பெறுவது சாத்தியமில்லை. |
சிபில் மதிப்பெண்ணை மேம்படுத்துவது எப்படி?
கிரெடிட் ஸ்கோரில் கணிசமான மாற்றத்தை பெற,
- கிரெடிட் கார்டு நிலுவைத்தொகை , லோன் ஈ.எம்.ஐ ஆகியவைகளை குறிப்பிட்ட தேதியில் செலுத்த தவறாதீர்கள்.
- ஒரே நேரத்தில் அதிக கடன் வாங்குவதைத் தவிர்க்கவும்.
- தேவை இல்லாமல் நிறைய கிரிடிட் கார்டை வைத்திருப்பதை தவிருங்கள்.
- கிரெடிட் கார்டின் உச்சவரம்பில் 30 % மட்டும் பயன்படுத்துங்கள். பயன்படுத்திய தொகையை உரிய தேதியில் திருப்பி செலுத்துங்கள் .
- கிரெடிட் கார்டில் நீண்ட காலமாக ‘minimum due’ மட்டும் செலுத்துவதை தவிருங்கள். பாக்கி தொகை முழுவதையும் செலுத்த முயற்சி மேற்கொள்ளுங்கள்.