Saturday, December 4, 2021
HomeHow ToPF கணக்கில் உள்ள தொகையை எவ்வாறு தெரிந்து கொள்வது? சில எளிய வழிகள் இதோ!

PF கணக்கில் உள்ள தொகையை எவ்வாறு தெரிந்து கொள்வது? சில எளிய வழிகள் இதோ!

பிஎஃப் எனப்படும் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி திட்டத்தினை பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்களுக்கு வழங்குகின்றன. இந்த நிதியை மத்திய அரசு நிர்ணயிக்கப்பட்ட வட்டியுடன்  பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின் எடுத்து கொள்ளலாம். சில நிபந்தனைகளுடன் ஓய்வு பெறுவதற்கு முன்பும் குறிப்பிட்ட தொகையை பெற்று கொள்ளலாம்.

உங்கள் பிஎஃப் கணக்கில் உள்ள தொகையை தெரிந்து கொள்ள நிறைய வழிகள் உள்ளன. அதை பற்றி காண்போம்.

எஸ்எம்எஸ் மூலம் எப்படி தெரிந்து கொள்வது?

உங்கள் யுஏஎன் நம்பர் ஈபிஎஃப்ஒவில்(EPFO) பதிவுசெய்யப்பட்டிருந்தால், 7738299899 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் உங்கள் சமீபத்திய பங்களிப்பு மற்றும் பிஎஃப் இருப்பு பற்றிய விவரங்களைப் பெறலாம். EPFOHO UAN ENG என்பதை டைப் செய்து உங்கள் மொபைல் நம்பரில் இருந்து அனுப்பவும். இதில் ENG என்பது ENGLISH என்ற சொல்லின் முதல் மூன்று எழுத்து.

நீங்கள் UAN-ல்  பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் இருந்து எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், மற்றும் உங்கள் UAN எண் வாங்கி கணக்கு, ஆதார், பான் ஆகியவையுடன் இணைத்திருப்பது அவசியம்.

Umang app ஆப் மூலம் எப்படி தெரிந்து கொள்வது?

ஊழியர்கள் தங்களது பிஎஃப் நிதியினை Umang app எனும் மொபைல் ஆப் மூலமாக தெரிந்து கொள்ள முடியும். இது அரசின் பல்வேறு சேவைகளை ஒரே இடத்தில் பெற துவங்கப்பட்ட செயலிதான் Umang App. இந்த ஆப்பை பயன்படுத்தி EPF பாஸ் புத்தகத்தினை பெற முடியும்  மற்றும் PF பணத்தை எடுக்க விண்ணப்பிக்கவும் முடியும்.

EPFO portal மூலம் எவ்வாறு தெரிந்து கொள்வது?

STEP 1: உங்களது PF கணக்கில் உள்ள பணத்தை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

STEP 2: UAN நம்பர் மற்றும் பாஸ்வேர்டு கொடுத்து உள்ளே செல்லவும்.

STEP 3: பிறகு உங்கள் MEMBER ID யை தேர்வு செய்து View Passbook என்பதை கிளிக் செய்து உங்கள் இருப்பினை தெரிந்து கொள்ளலாம்.

மிஸ்டு கால் மூலம் தெரிந்து கொள்ளலாம்

நீங்கள் யுஏஎன் நம்பரில் பதிவு செய்யப்பட்ட எண்ணிலிருந்து 011-22901406 என்ற எண்ணிக்கு, மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் உங்கள் PF கணக்கில் உள்ள இருப்பினை தெரிந்து கொள்ளலாம்.

இந்த சேவையை பெறுவதற்கும் உங்கள் UAN எண் வாங்கி கணக்கு, ஆதார் மற்றும்  பான் ஆகியவையுடன் இணைத்திருப்பது அவசியம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments