பேடிஎம் செயலியில் இலவசமாக சிபில் ஸ்கோர் அறிந்து கொள்ளும் வசதி பலரும் அறிந்திராத அம்சங்களில் ஒன்றாக இருக்கிறது. இதை கொண்டு விரிவான அறிக்கையை பார்ப்பது மட்டுமின்றி பயன்பாட்டில் இருக்கும் கிரெடிட் கார்டுகள் மற்றும் கடன் விவரங்களை அறிந்து கொள்ள முடியும்.
இத்துடன் பேடிஎம் செயலி கொண்டு கிரெடிட் ஸ்கோரை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதியை வழங்குகிறது. இவைதவிர இந்த செயலி கொண்டு கிரெடிட் விவரங்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள முடியும். இதை கொண்டு சிபில் ஸ்கோரை எவ்வாறு மேம்படுத்துவது, கிரெடிட் அறிக்கையை ஆய்வு செய்து, சிபில் ஸ்கோர் முக்கியத்துவம் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
கிரெடிட் ஸ்கோர் என்பது 300 முதல் 900 வரையிலான மூன்று இலக்க எண்கள் ஆகும். இவை ஒருத்தரின் கிரெடிட் நிலை தரம் மற்றும் இதன் நிதிநிலை அறிக்கை போன்று செயல்படுகிறது. இது ஒருத்தர் தான் வாங்கிய கடன்களை சரியாக செலுத்தி உள்ளார் என்பதை பொருத்து வழங்கப்படுகிறது. அதிக சிபில் ஸ்கோர் இருந்தால், ஒருவருக்கு மிக எளிதில் கடன் வழங்கும் வாய்ப்புகள் ஏற்படும்.
பேடிஎம் செயலி கொண்டு இலவசமாக சிபில் ஸ்கோரை அறிந்து கொள்வது எப்படி?
– ஸ்மார்ட்போனில் பேடிஎம் செயலியை ஓபன் மற்றும் லாக் இன் செய்ய வேண்டும்
– ஹோம் ஸ்கிரீனில் உள்ள ஷோ மோர்(Show More) எனும் ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்
– இனி ஃபிரீ கிரெடிட் ஸ்கோர் ஆப்ஷனை ஃபீச்சர்டு பகுதியில் இருந்து தேர்வு செய்யவும்
– பேன் கார்டு நம்பர் மற்றும் பிறந்த தேதியை பதிவிட வேண்டும்
– புதிதாக பேடிஎம் பயன்படுத்துவோர் எனில் செயலி ஒடிபி மூலம் வெரிஃபை செய்ய வேண்டும்
இவ்வாறு செய்ததும், சிபில் அல்லது கிரெடிட் ஸ்கோரை இலவசமாக அறிந்து கொள்ளலாம். இந்த இடத்தில் ஆல் லோன் & கிரெடிட் கார்டு அக்கவுண்ட்ஸ் ஆப்ஷனை தேர்வு செய்து சிபில் கிரெடிட் ரிப்போர்ட்டை அறிந்து கொள்ள முடியும்.