சென்னை: விஜே மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது ஏன் என்ற கேள்வி தொலைக்காட்சி வட்டாரத்தில் சுழன்று அடித்துக்கொண்டு இருக்கிறது.
குக் வித் கோமாளி சீசன் 4 தற்போது நடந்து கொண்டு இருக்கிறது. முதல் இரண்டு சீசன்கள் காமெடி காரணமாக பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. ஆனால் கடந்த 2 சீசன்களாக காமெடி பெரிய அளவில் எடுபடவில்லை என்று விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.
புதிதாக வந்த கோமாளிகளிலும் மோனிஷாவை தவிர வேறு கோமாளிகள் பெரிதாக சோபிக்கவில்லை. முக்கியமாக புகழ் செய்யும் காமெடிகள் பெரிதாக ஈர்க்கவில்லை. அதோடு இந்த முறை பாலாவும் இல்லாத காரணத்தால் பெரிதாக நிகழ்ச்சி ஈடுபடவில்லை.
இந்த நிலையில்தான் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக விஜே மணிமேகலை தெரிவித்துள்ளார். விஜே மணிமேகலை நிகழ்ச்சியில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக விலகியதாக கூறப்பட்டது. நிகழ்ச்சியில் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் காரணமாக அவர் விலகியதாக கூறப்பட்டது.
ஆனால் விஜே மணிமேகலை விலக அது காரணம் இல்லை என்று கூறப்படுகிறது. அதன்படி பல புதிய கோமாளிகள் வந்துவிட்டதால் இனியும் கோமாளியாக நீடிக்க அவர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அதோடு விஜய் டிவியிலேயே அவர் விஜேவாக வேறு ஒரு ஷோ செய்ய போகிறாராம். பாலா விஜே ஆன நிலையில் மணிமேகலையும் ஆக போவதாக கூறப்படுகிறது.
அதனால்தான் அவர் நிகழ்ச்சியில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. மற்றபடி விஜே மணிமேகலை கர்ப்பமாக இருப்பதாக சில செய்திகள் வந்தன. ஆனால் அதில் உண்மை இல்லை என்று கூறப்படுகிறது. விஜே மணிமேகலை புதிதாக ஒரு ஷோவில் விஜே ஆக இருக்க போகிறார். அதோடு ஒரு படம் ஒன்றிலும் ஒரு ரோலில் நடிக்கிறார், அதனால்தான் அவர் ஷோவில் இருந்து வெளியேறி உள்ளார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
ALSO READ | போதும்.. போதும்.. சினிமாவிற்கு மொத்தமாக முழுக்கு போடுகிறாரா நயன்தாரா?