நடப்பாண்டிற்கான பொங்கல் விருந்தாக தமிழ் திரையுலகிற்கு துணிவு படமும், வாரிசு படமும் வெளியாகியுள்ளது. வாரிசு படத்தை காட்டிலும் துணிவு படத்திற்கு நல்ல வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான எச்.வினோத் இயக்கியுள்ள துணிவு படம் தமிழ்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
இந்நிலையில் துணிவு திரைப்படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ.26 கோடி வசூலித்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் ரூ.19 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்காக தொடர் விடுமுறை என்பதால் துணிவு படத்திற்கு தொடர்ந்து வசூல் குவியும் என்று எதிர்பார்க்கலாம்.
அஜித்குாரின் திரை வாழ்க்கையில் அமெரிக்காவில் துணிவு நல்ல வசூலை குவித்து வருகிறது. அதேபோல, பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் துணிவு படம் வசூலை குவித்து வருகிறது. துணிவு படத்தில் அஜித்துடன் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, பிரேம் மற்றும் வீரா நடித்துள்ளனர். இவர்களுடன் ஜிபி முத்து, ஜான் கொகேன், பட்டிமன்ற பேச்சாளர் மோகனசுந்தரம், பிக்பாஸ் பாவனி, அமீர், சிபி சந்திரன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தை தமிழ்நாட்டில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமும், வெளிநாடுகளில் லைகா நிறுவனமும் வெளியிட்டுள்ளது.