Monday, March 27, 2023
HomeசினிமாHeroinesஅந்த வார்த்தைகள் அதிகம் காயப்படுத்துச்சு - இப்போ இப்படி மாறிட்டேன் - மேஜிக் அப்டேட் கொடுத்த...

அந்த வார்த்தைகள் அதிகம் காயப்படுத்துச்சு – இப்போ இப்படி மாறிட்டேன் – மேஜிக் அப்டேட் கொடுத்த நடிகை

நடிகை தனுஸ்ரீ தத்தா 15 கிலோ உடல் எடையை குறைத்து இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். கடும் உடற்பயிற்சி, யோகா, கட்டுப்பாடான உணவு முறை உள்ளிட்டவைகளை மேற்கொண்டு தன் இலக்கை எட்டியதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அமெரிக்காவில் வசிக்கும் தனுஸ்ரீ தனது உடலில் ஏற்பட்ட மாற்றத்தை புகைப்படம் மற்றும் வீடியோ வடிவில் இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவிட்டு வருகிறார். அவைகளில் தனுஸ்ரீ முன்பை விட மெல்லிய உடல்வாகு கொண்டிருக்கிறார். திரையில் அழகாக காட்சியளிக்க வேண்டும் என்ற எண்ணம் தனக்கு ஊக்கம் அளித்ததாக அவர் தெரிவித்து இருக்கிறார்.

தனியார் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், ஆம், அது தான் முக்கிய காரணம். என் உடல் வாகு மற்றும் வடிவத்தில் நான் ஆரோக்கியமாகவும் இருந்தேன். நான் உடல் பருமன் கொண்டிருக்கவில்லை. எனினும், திரையில் தோன்றும் போது இன்னும் உடல் எடையை குறைப்பது நல்ல முடிவுகளை பெற்று தரும் என நினைத்தேன்.

Tanushree Dutta sheds 15 kgs weight

அதையே இலக்காக கொண்டு பயிற்சியை துவங்கினேன். லோ-கார்ப் முதல் நோ-கார்ப் டயட் உள்ளிட்டவைகளை கடுமையாக பின்பற்றினேன். உடல் எடை பயிற்சி, தினமும் 2 மணி நேர நடைபயிற்சி, ஆரோக்கியம் தரும் பழங்கள் மற்றும் சாலட்களை சாப்பிட்டேன். மற்றவர்கள் தன்னை பற்றி கூறிய கருத்துக்கள் அதிக காயத்தை ஏற்படுத்தியதாக தனுஸ்ரீ தெரிவித்தார்.

”கடந்த சில ஆண்டுகளாக, அளவில் சற்றே பெரிதாக இருந்த சமயத்தில், பலரும் என் உடல்வாகு கொண்டு என்னை கேலி செய்தனர். சமயங்களில் மிகவும் காயப்படுத்தும் வார்த்தைகளை பலர் என்னிடம் தெரிவித்தது உண்டு. முற்றிலும் சம்மந்தம் இல்லாத கருத்துக்களை பலர் தெரிவிப்பர். என்னை காயப்படுத்தும் வகையில் பலர் பேசினர். இதனால் எனக்கு அதிகளவு மன உளைச்சல் ஏற்பட்டது.” என அவர் தெரிவித்து இருக்கிறார்.

இத்துடன் சமீபத்திய இன்ஸ்டா பதிவில் தன் புகைப்படத்துடன், ”எந்த மாயமும் நடக்கவில்லை, என்னை முழுமையாக மாற்றிக் கொள்ள சிலவற்றை தியாகம் செய்தேன். சில நடவடிக்கைகள், உணவு பழக்கவழக்கங்களை மாற்றிக் கொண்டேன். இன்னும் அதிகம் உழைக்க வேண்டும். பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அனைவரின் வாழ்த்துகளும், ஆசீர்வாதமும் தேவை” என குறிப்பிட்டு இருக்கிறார்.