Saturday, May 27, 2023
Homeசினிமாகோல்டன் குளோப்ஸ் விருது: ராஜமவுலி கூறியது என்ன?

கோல்டன் குளோப்ஸ் விருது: ராஜமவுலி கூறியது என்ன?

2023 ஆண்டுக்கான கோல்டன் கோல்ப்ஸ் விருது ராஜமவுலி இயக்கிய RRR படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு வழங்கப்பட்டுள்ளது

கடந்த ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., ஆலியபட், ராம்சரண் நடிப்பில் வெளியான  RRR திரைப்படம். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

மேலும் சர்வதேச அளவிலும் RRR திரைப்படத்திற்கு அங்கீகாரங்கள் கிடைத்த வண்ணம் உள்ளன. அண்மையில் அமரிக்காவில் நியூயார்க் திரைப்பட விமர்சகர்கள் வட்டம் சார்பில் சிறந்த இயக்குநர் விருது ராஜமவுலிக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், ஆஸ்கர் ரேஸிலும் RRR திரைப்படம் இணைந்துள்ளது.

இந்நிலையில், 80-வது கோல்டன் குளோப்ஸ் விருது வழகும் விழா அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்றது. இதில் RRR திரைப்படம், பாடல் மற்றும் ஆங்கிலம் அல்லாத திரைப்பட பிரிவில் போட்டியிட்டது. அதில் சிறந்த பாடல் பிரிவில் ‘நாட்டு நாட்டு’ பாடல் தேர்வானது. இந்த பாடலுக்கு இசையமைத்த எம்.எம்.கீரவாணி விருதை பெற்றுக் கொண்டார். அப்போது அங்கிருந்த ராஜமவுலி, ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண் உள்ளிட்ட படக்குழுவினர் துள்ளிக் குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

சர்வதேச அரங்கில் இந்திய சினிமா அங்கீகாரம் பெற்றுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பிரதமர் மோடி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ராஹ்மான், நடிகை ஆலியா பட், ஷாருக்கான் உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்

இதையடுத்து, இது RRR திரைப்படத்தின் வெற்றி மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் வெற்றி என ராஜமவுலி தெரிவித்துள்ளார். படத்தின் இசையமைப்பாளர் கீரவாணிக்கு நன்றி கூறியுள்ள ராஜமவுலி, ஒட்டுமொத்த உலகமும் “நாட்டு நாட்டு” பாடலுக்கு குத்தாட்டம் போடுவது பெருமையாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.