தென்னிந்தியாவின் பிரபல நடிகை சமந்தா. தமிழிலும், தெலுங்கிலும் நம்பர் 1 நடிகையாக வலம் வரும் இவருக்கு மயோசிடிஸ் என்கிற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக படப்பிடிப்புகள் எதிலும் கலந்து கொள்ளாமல் சிகிச்சை எடுத்து வந்த சமந்தாவிற்கு, அந்த நோய் பாதிப்பு குறைந்ததையடுத்து, மீண்டும் சினிமாவில் பிசியாகி உள்ளார். அவரது நடிப்பில் உருவாகியுள்ள சாகுந்தாலம் படத்தின் டிரைலர் நேற்று ரிலீசானது.
ஹைதராபாத்தில் நடைபெற்ற இதன் படப்பிடிப்பில் சமந்தா பங்கேற்றார். மயோசிடிஸ் நோய் பாதிப்புக்கு பின் அவர் பங்கேற்ற முதல் விழா என்பதால், பேசும்போதும் உணர்ச்சிவசப்பட்டு சமந்தா கண்ணீர்விட்டு அழுதார். இது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும், சினிமா மீதான காதலை மட்டும் தான் இழக்கவில்லை என்று சமந்தா பேசினார்.
இந்த நிலையில், சாகுந்தலம் பட நிகழ்ச்சியில் பங்கேற்ற சமந்தாவின் புகைப்படங்களை பகிர்ந்த நெட்டிசன் ஒருவர், சமந்தாவின் அழகெல்லாம் போய்விட்டது. இதற்காக வருத்தப்படுவதாக பதிவிட்டிருந்தார். அவரது பதிவிற்கு பலரும் கடும் கண்டனங்கள் குவிந்தது.
அவரது பதிவிற்கு பதிலளித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள சமந்தா, மாதக்கணக்கான சிகிச்சையும், மருந்துகளும் எடுத்துக்கொள்ளும் நிலை என்னைப்போல் உங்களுக்கும் வந்துவிடக்கூடாது என நான் வேண்டிக்கொள்கிறேன். உங்கள் அழகு பிரகாசமாக என்னிடமிருந்து அன்பைத் தருகிறேன் என பதிவிட்டுள்ளார். தன் அழகை பற்றி விமர்சித்த ரசிகருக்கு மிகவும் அழகாக பதிலடி தந்த சமந்தாவின் ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.
சமந்தா தமிழில் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், தனுஷ் என பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். தெலுங்கில் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. நாகசைதன்யாவை விவகாரத்து செய்த பிறகு தற்போது தனியாக சமந்தா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.