பல்வேறு சர்ச்சைகளுக்கு வெளிப்படையாக தனது கருத்துக்களை தெரிவித்து வரும் முகேஷ் கண்ணா தனது திருமணம் பற்றிய சர்ச்சைக்கு முற்றிப்புள்ளி வைத்துள்ளார். சக்திமான் தொடரில் நடித்து பிரபலமான முகேஷ் கண்ணா திருமணம் பற்றிய கேள்விக்கு சமீபத்திய பேட்டியில் பதில் அளித்தார்.
அந்த வகையில் பேட்டி ஒன்றில் முகேஷ் கண்ணாவிடம் தனது திருமணம் குறித்து கேட்கப்பட்டதற்கு, திருமணம் குறித்து தான் எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை என்றும் திருமணம் என்பது ஒவ்வொருத்தரின் தலைவிதி சார்ந்தது என்று கூறினார்.
மேலும் தனது பழக்கவழக்கங்கள் ,பேசும் விதம் , தன்னை பற்றிய சர்ச்சைகள் போன்றவற்றை மாற்ற வேணடும். அதற்கு இன்னும் சில வருடங்கள் ஆகலாம் என்றும் கூறியுள்ளார்.
தான் பிதாமகன் பீஷ்மர் கதாபாத்திரத்தில் நடித்த காரணத்தால், அவரது வாழ்க்கை முறையை பின்பற்றி வருவதாக பரவலான கருத்து நிலவி வருகிறது. நான் அத்தனை மதிப்பு கொண்டவன் இல்லை, மேலும் யாராலும் பீஷ்மர் ஆக முடியாது. உண்மையில் நான் பீஷ்மர் தத்துவங்களை பின்பற்றவில்லை. என அவர் மேலும் தெரிவித்தார்.