கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக தமிழ் திரைப்படங்கள் ஒடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில் இன்று அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் ஐந்து முன்னணி இயக்குனர்கள் இயக்கத்தில் உருவான புத்தம் புதுக் காலை திரைப்படம் வெளியானது. ட்விட்டர் டிரெண்டிங்கில் ரசிகர்களின் பாராட்டு மழையில் புத்தும் புதுக் காலை நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
புத்தம் புதுக் காலை ஆந்தாலஜி திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை கௌதம் வாசுதேவ் மேனன், சுதா கொங்கரா, கார்த்திக் சுப்புராஜ், ராஜீவ் மேனன், சுஹாசினி மணி ரத்னம் ஆகியோர் இயக்கி உள்ளனர். கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் இந்த படம் மிக குறைந்த பணியாளர்களுடன் படமாக்கப்பட்டது.
இந்த திரைப்படத்தில் ஐந்து குறும்படங்கள் உள்ளடக்கியுள்ளது. இவை ஒவ்வொன்றும் தனி கதையம்சம் கொண்டுள்ளன. ஐந்து கதைக்களங்களை சேர்த்து திரைப்படத்தின் கிளைமேக்ஸ் குறும்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார்.
கிளைமேக்ஸ் காட்சிகள் அடங்கிய கடைசி குறும்படம் அதிக சுவாரஸ்ய அனுபவம் வழங்கியதாக பலரும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.