பாகுபலி திரைப்படம் மூலம் பிரபல நடிகரான பிரபாஸ் ஆதிபுருஷ் எனும் புதிய படத்தில் நடிக்கிறார். இது பிரபாசுக்கு 21-வது படம் ஆகும். இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகிறது.
இந்தி, தெலுங்கு மொழிகளில் தயாராகும் இந்த படத்தை தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் டப் செய்து வெளியிடப்பட இருக்கிறது. ஆதிபுரூஷ் ராமாயணத்தின் ஒருபகுதியை கதைக்களமாக கொண்டிருக்கும் என அதன் போஸ்டர் மூலம் தெரியவந்துள்ளது.
இத்துடன் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடிப்பதும் உறுதியாகி இருக்கிறது. இராமயண கதை என்பதால் படத்தின் மற்றொரு முக்கிய கதாபாத்திரம் ராவணன் வேடம் எனலாம். இந்த கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சையிப் அலிகான் நடிக்க இருக்கிறார்.
சுமார் ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தை ஓம் ராவத் இயக்க இருக்கிறார். பெரும் பட்ஜெட்டில் உருவாகும் ஆதிபுரூஷ் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.