2011-ம் ஆண்டு இந்தியா கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றால் நிர்வாணமாக ஓடுவேன் எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை பூனம் பாண்டே.
சுய விளம்பரத்திற்காக அவ்வப்போது எதாவது சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்தவகையில், தற்போது ஊரடங்கை மீறியதாக பூனம் பாண்டே கைது செய்யப்பட்டார்.
முன்னதாக பூனம் பாண்டேவுக்கும் அவரது காதலர் சாம் பாம்பேவுக்கும் கடந்த ஜூலை மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பூனம் பாண்டே – சாம் பாம்பேவுக்கு தற்போது திருமணம் நடைபெற்று உள்ளது.
திருமண புகைப்படத்தை பூனம் பாண்டே தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். புகைப்படங்களுடன் ஏழு ஜென்மம் உன்னுடன் வாழ வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.