திருமணம் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக கூறுவர். சமயங்களில் திரையுலக பிரபலகள் தங்களுடன் சேர்ந்து நடிக்கும் சக நடிகர், நடிகையர்களை கரம் பிடிப்பர். எனினும், பல பிரபலங்கள் பெரும் தொழிலதிபர்களை காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர்.
அந்த வகையில் பெரும் தொழிலதிபர்களை திருமணம் செய்து கொண்ட பிரபல நட்சத்திரங்கள், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கும் நட்சத்திரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
காஜல் அகர்வால் மற்றும் கௌதம் கிச்லு
காஜல் அகர்வால் மற்றும் கௌதம் கிச்லு ஜோடிக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. முன்னதாக இருவரும் நீண்ட காலமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது.
ரீமா சென்
தென்னிந்திய சினிமா வட்டாரத்தில் பிரபல நடிகையான ரீமா சென் 2012 ஆம் ஆண்டு ஷிவ் கரன் சிங் எனும் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்றது.
ஏமி ஜாக்சன்
2015 ஆண்டு முதல் ஏமி ஜாக்சன் மற்றும் ஜார்ஜ் இருவரும் காதலித்து வந்தனர். திருமணத்திற்கு முன் ஒன்றாக வாழ்ந்து வந்த இந்த ஜோடிக்கு கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.
ராதிகா சரத்குமார்
90களில் மிகவும் பிரபல நடிகையாக இருந்த ராதிகா மற்றும் ப்ரிட்டன் தொழிலதிபர் ரிச்சர்ட் ஹார்டியை திருமணம் செய்து கொண்டார். எனினும், சிலகாலம் ஒன்றாக இருந்து இருவரும் விரைவில் விவாகரத்து செய்து கொண்டனர்.
ஷ்ரியா சரண்
ரஷ்ய தொழிலதிபர் மற்றும் டென்னிஸ் வீரரான ஆண்ட்ரெ கோஷீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஷ்ரியா சரண் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
அசின்
முன்னணி தமிழ் நடிகையான அசின் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் ஷர்மாவை 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்றது. இவர்களுக்கு 2017 ஆண்டில் பெண் குழந்தை பிறந்தது.
சமீரா ரெட்டி
சமீரா ரெட்டி அக்ஷய் வர்தே எனும் தொழிலதிபரை 2014 ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் இருக்கின்றன.