தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய சினிமா வட்டாரத்தில் பிரபல நடிகைகளில் ஒருவராக நயன்தாரா இருக்கிறார். தமிழ் திரையுலகில் 2003 ஆம் ஆண்டு அறிமுகமான நயன்தாரா இன்றும் முன்னணி நடிகையாக வலம் வருவதோடு, லேடி சூப்பர்ஸ்டார் என்றும் அழைக்கப்படுகிறார்.
நயன்தாரா முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பது மட்டுமின்றி, ஹீரோயின் முக்கியத்துவம் கொண்ட வித்தியாசமான கதைகளை தேர்வு செய்தும் நடித்து வருகிறார். இதுபோன்று இவர் தேர்வு செய்து நடித்த சில படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
இந்நிலையில், தான் தேர்வு செய்து நடித்த திரைப்படம் பற்றிய அதிர்ச்சி தகவலை நயன்தாரா தெரிவித்து இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.
கொலையுதிர் காலம் படத்தில் நடித்ததற்கு வெட்கப்படுகிறேன். அந்த படத்தின் கதையை கேட்காமல் நடித்ததே நான் செய்து தவறு என நயன்தாரா தெரிவித்தார் என கூறப்படுகிறது. தமிழில் வெளியான கொலையுதிர் காலம் ரசிகர்களிடையே போதுமான வரவேற்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.