Friday, May 26, 2023
Homeசினிமாசினிமா செய்திகள்பேமிலி ஆடியன்ஸ் மனதில் மீண்டும் இடம்பிடிப்பாரா மாதவன்..? எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா மித்ரன்?

பேமிலி ஆடியன்ஸ் மனதில் மீண்டும் இடம்பிடிப்பாரா மாதவன்..? எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா மித்ரன்?

பெண்களின் கனவுக்கண்ணனாக வலம் வந்தவர் மாதவன். ஒரு காலத்தில் பெண்கள் அனைவரும் தங்களுக்கு வரும் கணவன்மார்கள் மாதவன் போல இருக்க வேண்டும் என்று விரும்பியது எல்லாம் உண்டு. அந்தளவிற்கு கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட் ரசிகைகளையும் தன் அழகால் கட்டிப்போட்டியிருந்தார்.

சாக்லேட் பாயாக மட்டுமின்றி நல்ல நடிகனாக பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் சாக்லேட் பாயாக மட்டும் இருந்தவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு இறுதிச்சுற்று மூலம் ஆக்ஷன் அவதாரம் எடுத்தார். அடுத்து விக்ரம் வேதா என்று மீண்டும் ஆக்ஷன் அவதாரம் எடுத்தார், அடுத்தடுத்து சில படங்களில் நடித்தாலும் தமிழில் பெரியளவில் மாதவன் நடிக்காமலே உள்ளார்.

மாதவனின் மகன் வேதாந்த் மாதவன் சிறந்த தடகள வீரராக அசத்தி வருவதால் அவரை ஒலிம்பிக்கிற்கு தயார்படுத்தும் விதமாக மாதவன் குடும்பம் துபாய்க்கு குடியேறியுள்ளது. இதனால், பெரியளவில் படங்களில் கவனம் செலுத்தாத மாதவன் தற்போது திருச்சிற்றம்பலம் படத்தை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

ALSO READ | சீயான் இஸ் பேக்..! விக்ரம் வேட்டையாடப் போகும் 2023ம் ஆண்டு..! ரசிகர்கள் ஹாப்பி அண்ணாச்சி

யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன், மீண்டும் ஒரு காதல் கதை, திருச்சிற்றம்பலம் போன்ற குடும்ப படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் மாதவன் நடிப்பதால் நிச்சயம் இது ஒரு குடும்ப படமாக இருக்க வாய்ப்புகள் அதிகளவில் இருப்பதாகவே எதிர்பார்க்கலாம். திருச்சிற்றம்பலம் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததால் நிச்சயம் இயக்குனர் மித்ரன் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மாதவனும் அனைத்து குடும்பங்களையும் சென்றடையும் வகையில் படம் நடித்து நீண்ட வருடங்கள் ஆகிவிட்டது என்பதே உண்மையாகும். இதனால், இந்த படம் நிச்சயம் ஒரு அக்மார்க் குடும்ப படமாக இருக்கும் என்றே ரசிகர்கள் நம்பலாம்.