Monday, March 27, 2023
Homeசினிமாசினிமா செய்திகள்பாலிவுட்டைப் போல கோலிவுட்டிலும் நடக்குமா? ரசிகர்கள் ஏக்கம்

பாலிவுட்டைப் போல கோலிவுட்டிலும் நடக்குமா? ரசிகர்கள் ஏக்கம்

ஒவ்வொரு ஊரிலும் உச்ச நட்சத்திரங்கள் மோதல் என்பது இருந்து கொண்டே இருப்பது வழக்கமான ஒன்றாக உள்ளது. நமது ஊரில் விஜய் – அஜித் போல ஷாரூக்கான் – சல்மான்கான் பாலிவுட்டில் உள்ளனர். இந்தியாவிலே மிகப்பெரிய வர்த்தகத்தை கொண்டது பாலிவுட் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று ஆகும்.

சமீபத்திய பாலிவுட் படங்கள் மீது கடுமையான விமர்சனங்கள் இருந்தாலும் பாலிவுட் படங்களில் அன்று முதல் இன்று வரை உச்சநட்சத்திரங்களாக உலா வருபவர்கள் இணைந்து நடிப்பது என்பது மிக இயல்பாக அரங்கேறி வருகிறது. ஆனால், தென்னிந்திய மொழிகளில் அதற்கான வாய்ப்புகள என்பது மிகவும் அரிதான ஒன்றாகவே உள்ளது. குறிப்பாக, தமிழ் மொழியில் மிக மிக அரிதான நிகழ்வாகவே அது நடக்கும்.

சமீபத்தில் பாலிவுட் பாட்ஷா ஷாரூக்கான் நடிப்பில் வெளியான பதான் படத்தில் சல்மான்கான் கௌரவ வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார். சமீபகாலமாக சல்மான்கான் ஏராளமான நடிகர்களின் படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்து அசத்தி வருகிறார். ஏற்கனவே ஷாரூக்கானின் ஓரிரு படங்களில் கௌரவ தோற்றத்தில் சல்மான் கான் நடித்துள்ளார்.

இந்திய ராணுவ வீரராக ஏற்கனவே டைகர் எனும் படத்தில் சல்மான் கான் நடித்திருப்பார். அந்த படத்தில் வரும் கதாபாத்திரமாகவே பதான் படத்தில் ஒரு சண்டைக்காட்சியில் சல்மான்கான் அசத்தியுள்ளார். மேலும், பாலிவுட்டில் அஜய் தேவ்கன், அக்ஷய்குமார், ரன்வீர்சிங் என்று பலரும் இணைந்து சூர்யவன்ஷி படத்தில் நடித்துள்ளனர். சல்மான்கான் தெலுங்கில் சிரஞ்சீவியின் காட்பாதர் படத்தில் நடித்து அசத்தியுள்ளார். இது அந்த படங்களின் வசூலுக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் விருந்தாக அமைகிறது.

தமிழ் படங்களிலும் உச்ச நட்சத்திரங்களாக உலா வருபவர்கள் இணைந்து நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் நீண்டநாட்களாக ஆசைப்படுகிறார்கள். குறிப்பாக, தமிழ் சினிமாவின் இரு துருவங்களான விஜய் – அஜித் இணைந்து மீண்டும் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள்.
அதற்கேற்பத கதைக்களம் அமைந்து இருவருக்கும் நிகரான கதாபாத்திரங்கள் அமைந்தால் அது நடப்பதற்கு வாய்ப்புகள் உண்டு என்கின்றனர் திரைவிமர்சகர்கள். அதற்கான முன்னெடுப்புகளாகதான் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத்பாசில் ஆகியோருடன் இறுதியில் சூர்யா இணைந்து நடித்தார். அது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

இனி வருங்காலங்களில் தமிழில் ரசிகர்கள் இணைந்து நடிப்பது அதிகரிக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.