சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர தற்போது பெரிய அளவில் டிரெண்டாகி உள்ளது. இந்த தொடரில் ஐஸ்வர்யா என்ற ரோலில் நடித்து வந்த சாய் காயத்ரி மிகப்பெரிய அளவில் கவனிக்கப்பட்டார். இவரின் க்யூட்டான நடிப்பு காரணமாக இணையத்தில் கவனிக்கப்பட்டார்.
ஆனால் திடீரென இவருக்கு என்ன தோன்றியதோ கடந்த வாரம் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதற்கு அவர் காரணமும் சொன்னார் அந்த ரோலில் இனி வரும் சீன்களில் நடிக்க விருப்பம் இல்லை என்று வெளிப்படையாக அவர் கூறி இருந்தார். அவரின் ரோலில் சில மாற்றங்கள் செய்வதாகவும், அவரின் ரோல் வில்லியாக மாற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதுவே அவர் வெளியேற காரணமா என கேள்வி எழுந்திருக்கிறது.
VJ தீபிகா என்பவர் தற்போது புதிதாக ஐஸ்வர்யா ரோலில் நடிக்க தொடங்கி இருக்கிறார். இவரின் நடிப்பும் கவனிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் உண்மையில் சாய் காயத்ரி வெளியேற என்ன காரணம் என்று தெரியவில்லை. அவருக்கு திருமணம் ஆக போகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த நிலையில்தான் சாய் காயத்ரி தற்போது ஆன்மீக பயணம் மேற்கொள்ள தொடங்கி உள்ளார். ராகுல் கோவில் இருக்கும் திருநாகேஸ்வரம், வேளாங்கண்ணி கோவில், நாகூர் தர்கா என்று பல்வேறு இடங்களுக்கு இவர் சென்று வருகிறார்.
அங்கே சிறப்பு பூஜைகளை இவர் செய்து உள்ளார். அங்கே பூஜை செய்த வீடியோவை, போட்டோவை இவர் தற்போது இஸ்தாவில் வெளியிட்டு இருக்கிறார். இப்படி திடீரென இவர் சீரியலை விட்டுவிட்டு பக்தி மார்க்கமாக சென்றது ஏன் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
ALSO READ | ஆஹா தி லெஜண்ட் சரவணனா இது.. ஆளே மாறிட்டாரே.. அடையாளமே தெரியலையே!