சென்னை: ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு திருப்தி இல்லாத காரணத்தால் இயக்குனர் நெல்சன் மீது ரஜினி கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் மெதுவாக நடந்து வருகிறது.
இந்த படத்தில் தொடக்கத்தில் ரஜினி மட்டுமே நடிப்பதாக இருந்தது. அதன்பின் இதன் கதையில் கே. எஸ் ரவிக்குமார் மாற்றங்களை மேற்கொண்டார். நெல்சன் கதையில் திருப்தி இல்லாததால் அவர் மாற்றங்களை செய்தார்.
அதோடு கதையின் திரைக்கதையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டது. இதையடுத்து படத்திற்கான பணிகள் தொடங்கின. ஒருவருடமாக கதை சென்று கொண்டு இருக்கிறது. ஆனாலும் இந்த படம் இன்னும் முடியவில்லை. அதோடு படத்திற்கு இடையே கதையில் பல மாற்றங்களை செய்து வருகிறார்களாம்.
படத்திற்கு இடை இடையே கதையில் தேவையில்லாத மாற்றங்களை இவர்கள் செய்வதாக கூறப்படுகிறது. கதையை சரியாக முடிவு செய்யாமல் இவர்கள் களமிறங்கியதே இந்த மாற்றங்களை செய்ய முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில்தான் கதையில் கடந்த 2022 நவம்பரில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் சேர்க்கப்பட்டார். அதன்பின் மோகன் லால் சேர்க்கப்பட்டார். பின்ன ரசனில் சேர்க்கப்பட்டார். பின்னர் ஜாக்கி ஷெராப் சேர்க்கப்பட்டார். கதையை சரியாக திட்டமிடாமல் எடுக்க தொடங்கியதே இதற்கு காரணம் என்கிறார்கள்.
அதோடு ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு திருப்தி இல்லாத காரணத்தால் இயக்குனர் நெல்சன் மீது ரஜினி கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு தளத்தில் அவர் நடந்து கொண்ட விதம் காரணமாக நெல்சன் கோபம் அடைந்ததாக கூறப்படுகிறது.