Thursday, June 1, 2023
Homeசினிமாசினிமா செய்திகள்ஆஹா இவரா? கவின் படத்தின் அடுத்த ஹீரோயின் யார் தெரியுமா.. சிவா ரூட்டை பிடிக்கிறாரோ!

ஆஹா இவரா? கவின் படத்தின் அடுத்த ஹீரோயின் யார் தெரியுமா.. சிவா ரூட்டை பிடிக்கிறாரோ!

சென்னை: நடிகர் கவின் நடிக்கும் அடுத்த படத்தில் ஹீரோயின் யார் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் கவின் நடித்த டாடா படம் சமீபத்தில் தியேட்டர்களில் வெளியானது. தற்போது இந்த படம் ஓடிடியிலும் வெளியானது. இந்த படம் அமேசான் பிரைமில் வெளியாகி இருக்கிறது. பாக்ய ராஜ், அபர்ணா தாஸ் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளார்.

தியேட்டரில் இந்த படம் பெரிய வரவேப்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் பாராட்டி இருந்தனர். முக்கியமாக கவின் நடிப்பை பலரும் பாராட்டி இருந்தனர். இந்த நிலையில்தான் ஓடிடியில் இந்த படம் பெரிய ஹிட் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவரின் இரண்டு படங்களும் அடுத்தடுத்து ஹிட் ஆகி உள்ளது.  முக்கியமாக டாடா குறித்து  தனுஷ், கார்த்தி என பல பிரபலங்கள் படம் பாராட்டி தள்ளி இருந்தனர். இவரின் முந்தைய படமான லிப்ட் படமும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

Who is the actress in the next movie of Actor Kavin?இவரின் அடுத்த படம் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. கவின் நடிக்கும் அடுத்த படத்தில் ஹீரோயின் யார் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன. அதன்படி நடன இயக்குனர் சதீஷ் இயக்கும் புதிய கதையில் இவர் நடிக்க உள்ளாராம். அதில் ப்ரியங்கா மோகன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் இருவரும் ஒன்றாக வெளியே இருக்கும் புகைப்படம் ஒன்று சமீபத்தில் வைரலானது.

இந்த நிலையில்தான் இவர்கள் இருவரும் ஒன்றாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ALSO READ | அடித்து தூக்கிய சிவகார்த்திகேயன்.. மாவீரன் ரிலீசுக்கு முன்பே  மாபெரும் வசூல்.. எவ்வளவு தெரியுமா?