Wednesday, May 31, 2023
HomeசினிமாHeroesஆஹா இவ்வளவா? விடுதலை படத்திற்கு நடிகர் சூரி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ஆஹா இவ்வளவா? விடுதலை படத்திற்கு நடிகர் சூரி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

நடிகர் சூரி விடுதலை படத்திற்காக எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.

பல படங்களில் காமெடியான நடித்து வரும் சூரி தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் விடுதலை படத்தில் நடித்து உள்ளார். இந்த படைத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது.

முதலில் ஒரு பாகமாக இந்த படம் வெளியாக இருந்தது. சிறிய படமாகவே இதை வெற்றிமாறன் எடுக்க இருந்தார். ஆனால் படம் எடுக்க எடுக்க அது பெரிய கதை ஆனது.

இதனால் படம் இரண்டு வருடங்களுக்கு மேல் சென்றது. இந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு முடிந்து உள்ளது. இந்த நிலையில்தான் இதை இரண்டு பாகமாக வெளியிட முடிவு செய்துள்ளனர். முதல் பாகம் மார்ச் 31ம் தேதி வெளியாகிறது.

ALSO READ | Viduthalai: சூரியை உச்சத்திற்கு கொண்டு செல்லப்போகும் விடுதலை!

இது சூரி கதா நாயகனாக நடிக்கும் படம் ஆகும். விஜய் சேதுபதி கதை நாயகனாக நடிக்கும் படம் ஆகும். இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லன் போன்ற பாத்திரத்தில் வந்தாலும் அவர் ஒரு போராளி என்பது குறிப்பிடத்தக்கது. எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கதையின் அடிப்படையில் இந்த படம் எடுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்தான்  நடிகர் சூரி விடுதலை படத்திற்காக எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன. அதன்படி முதலில்  விடுதலை படத்திற்காக இவருக்கு 30 லட்சம் ரூபாய் பேசப்பட்டு உள்ளது. ஆனால் இது இரண்டு பாகம் என்பதால் பின்னர் 40 லட்சம் ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டு உள்ளது.