Wednesday, May 31, 2023
Homeசினிமாசினிமா செய்திகள்விக்னேஷ் சிவன் டைரக்ஷனில் பிரதீப் ரங்கநாதன்..? கம்பேக் தருவாரா நயன்தாரா கணவர்?

விக்னேஷ் சிவன் டைரக்ஷனில் பிரதீப் ரங்கநாதன்..? கம்பேக் தருவாரா நயன்தாரா கணவர்?

தமிழ் திரையுலகம் ஒவ்வொரு ஆண்டும் சில வித்தியாசமான படைப்பாளிகளை கண்டறியும். அதுபோல, தமிழ் சினிமாவிற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோமாளி என்ற படம் மூலம் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கப்பட்ட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்.

முதல்படமே இந்த சமூகத்தில் மனிதர்கள் மாறி வரும் சூழலை மிக அழகாக நகைச்சுவையாக கூறியிருந்த இயக்குனர். கோமாளி படத்தின் வெற்றி மூலம் தன்னுடைய அடுத்த படத்தில் தானே நடித்து அதை 100 நாள் ஓடிய வெற்றிப்படமாக மாற்றிக்காட்டிய பெருமையையும் படைத்தவர். நல்ல இயக்குனராக மட்டுமின்றி நல்ல நடிகராக பிரதீப்பிற்கு வெற்றி கிட்டியது.

பிரதீப் ரங்கநாதனின் அபார நடிப்பு திறமையை பார்த்து அவர் நடிப்பதற்கான கதைகளுடன் ஏராளமான இயக்குனர்கள் அவரை அணுகி வருகின்றனர். அந்த வகையில், தற்போது அவரை விக்னேஷ் சிவன் இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏகே 62 படத்தில் இருந்து நீக்கப்பட்ட பிறகு கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்த விக்னேஷ் சிவன் நிச்சயம் மாபெரும் வெற்றி மூலம் மீண்டும் கம்பேக் தர வேண்டும் என்ற கட்டாயத்திலும், விடாப்பிடியுடனும் இருக்கிறார்.

விக்னேஷ் சிவன் பெரிய நடிகர்களுக்கான ஆக்ஷன் படங்களாக பண்ணும்போது தடுமாறினாலும், காமெடி கலந்த கலாட்டா படமாக இயக்குவதில் கில்லாடி ஆவார். அந்த வகையில் அவர் இயக்கிய நானும் ரவுடிதான் படம் மாபெரும் ஹிட் அடித்து அவரை பிரபல இயக்குனர் ஆக்கியது, தானா சேர்ந்த கூட்டம் தோல்விக்கு பிறகு அவர் இயக்கிய காத்துவாக்குல ரெண்டு காதல் குடும்பங்களுடன் அமர்ந்து சிரித்து பார்க்கும் கலாட்டா படமாக இருந்தது.

அப்பேற்பட்ட கலாட்டா படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்த விக்னேஷ்சிவன், பிரதீப் ரங்கநாதனை இயக்குவது ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் பேக்கேஜாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். நிச்சயம் நானும் ரவுடிதான் படத்தை போல கலாட்டா படமாக கலகலகவென்று வெற்றிபடத்தை விக்னேஷ்சிவன் தருவாரா? என்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ALSO READ | வெயிலுக்கு சருமம் டல் ஆகுதா..?கவலையை விடுங்க.. இதெல்லாம் சாப்பிடுங்க..!