Saturday, May 27, 2023
Homeசினிமாசினிமா செய்திகள்பிக் நியூஸ்.. கைகோர்க்கும் ஜூனியர் என்டிஆர் - தனுஷ்.. வெற்றிமாறன் இயக்கம்.. ஆஹா சூப்பர்

பிக் நியூஸ்.. கைகோர்க்கும் ஜூனியர் என்டிஆர் – தனுஷ்.. வெற்றிமாறன் இயக்கம்.. ஆஹா சூப்பர்

சென்னை: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் – தனுஷ் ஆகியோர் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குனர் வெற்றிமாறன் தற்போது விடுதலை படத்தை எடுத்து முடித்து உள்ளார். இந்த படம் இரண்டு பாகங்களாக வெளி வர உள்ளது. முதலில் இதை சிறிய படமாக எடுக்க நினைத்தார் வெற்றிமாறன்.

அதன்பின் கதை நீளம் காரணமாக பெரிய படமாக எடுக்க முயன்றார். தற்போது இது இரண்டு பாகமாக வெளியே வர உள்ளது. இந்த நிலையில்தான் ஜூனியர் என்டிஆரை வைத்து வெற்றிமாறன் படம் எடுப்பதாக செய்திகள் வந்தன.

ஜூனியர் என்டிஆறும் தனக்கு வெற்றிமாறன் மிகவும் பிடித்தமான இயக்குனர் என்று கூறி இருந்தார். இவரிடம் வெற்றிமாறன் சொன்ன கதை ஒன்றும் பெரிய அளவில் அவருக்கு பிடித்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் – தனுஷ் ஆகியோர் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்த படத்தில் இவர்கள் ஒன்றாக கைகோர்க்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான கதையை இருவரிடமும் அவர் சொல்லிவிட்டதாகவும், இருவருக்கும் கதை பிடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஒரு கேங்க் வார் டைப் கதையாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.

அதோடு இந்த படம் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜிவி  பிரகாஷ் இதன் இசையமைப்பாளராக இருப்பார் என்று முதல் கட்ட செய்திகள் வருகின்றன. தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் இந்த படம் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.

ALSO READ | கருமை அழகின் வண்ணமில்லையா..? தடம் புரண்ட தமிழ் சினிமா தன் அடையாளத்தை காட்டுமா…?