Monday, May 22, 2023
Homeசினிமாசினிமா செய்திகள்டாடா முதல் ரன் பேபி ரன் வரை.. இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள் இவைதான்

டாடா முதல் ரன் பேபி ரன் வரை.. இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள் இவைதான்

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகி இருக்கும் 4 முக்கியமான படங்களின் லிஸ்ட் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.

ஓடிடியில் வார வாரம் வெள்ளிக்கிழமை புதிய படங்கள் வெளியிடப்படுவது வழக்கம். வீக் எண்டில்  பலர் படம் பார்க்க விரும்புவார்கள். அதை கருத்தில் கொண்டு ஓடிடியில் தற்போது வீக் எண்டை மனதில் வைத்து படங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் ஹாட் ஸ்டாரில் இந்த வாரம் ரன் பேபி ரன் வெளியாகி உள்ளது. ஜியென் கிருஷ்ணகுமார் என்பவர் இந்த படத்தை எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் ஆர்ஜே பாலாஜி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளனர். ஆர். ஜே பாலாஜி நடித்த முதல் திரில்லர் ஜானர் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இது 3 பிப்ரவரி 2023 அன்று திரையரங்குகளில் வெளியானது. இது தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது.

அதேபோல் கவின் நடித்த டாடா படமும் வெளியாகி உள்ளது. இந்த படம் அமேசான் பிரைமில் வெளியாகி இருக்கிறது. பாக்ய ராஜ், அபர்ணா தாஸ் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளார். தியேட்டரில் இந்த படம் பெரிய வரவேப்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் பாராட்டி இருந்தனர். முக்கியமாக கவின் நடிப்பை பலரும் பாராட்டி இருந்தனர். இந்த நிலையில்தான் ஓடிடியில் இந்த படம் பெரிய ஹிட் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது போக பொம்மை நாயகி படம் ஜீ5ல் வெளியாகி உள்ளது. கன்னடாவில் ஹிட் அடித்த ராய்மோ படமும் தற்போது ஜூ5 ஓடிடியில் வெளியாகி உள்ளது.