சென்னை: தன்னுடைய புதிய படத்திற்காக தி லெஜண்ட் சரவணன் தனது லுக்கை மொத்தமாக மாற்றி உள்ளார்.
தி லெஜெண்ட் திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் கால் பதித்தவர் நடிகர் சரவணன். சரவணா ஸ்டோர்ஸ் என்ற இந்தியாவின் மிகப்பெரிய ஜவுளி மற்றும் ஜுவல்லரி நிறுவனத்தின் அதிபர் இவர்தான்.
தி லெஜெண்ட் படம் பெரிதாக ஓடவில்லை என்றாலும், மக்கள் இடையே கவனம் ஈர்த்தது. அதோடு இணையத்திலும் வைரலானது. பவர் ஸ்டார் இல்லாமல் காமெடிக்கு பஞ்சம் நிலவிய நிலையில் தி லெஜெண்ட் படம் அதை தீர்த்து வைத்தது. சரவணனின் ரோபோ போன்ற நடிப்பு கடுமையான, விமர்சனங்களுக்கும், கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளானது.
இருந்தாலும் அவர் மீதான அன்பை மக்கள் குறைத்துக்கொள்ளவில்லை. இன்னும் கொஞ்சம் நன்றாக நடித்தால் அவர் சிறப்பாக வரலாம். படத்தின் கதை நன்றாகவே இருந்தது என்று கூறி இருந்தனர். அதோடு தி லெஜெண்ட் படம் தற்போது ஓடிடியில் கூட ரிலீஸ் ஆகி உள்ளது. மக்கள் இடையே இதனால் மீண்டும் தி லெஜெண்ட் படம் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
நான் நடிப்பை விட மாட்டேன், அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிப்பேன் என்று சரவணன் கூட குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில்தான் அடுத்த படத்திற்காக அவர் கெட் அப் மாற்றி உள்ளார். தாடி வைத்து முகத்தில் மேக் அப்பை குறைத்து அவர் தோற்றத்தை மாற்றி உள்ளார். கொஞ்சம் வில்லன் போன்ற லுக்கில் அவர் தற்போது தோற்றம் அளிக்கிறார். அவரின் புதிய லுக் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அவரின் புதிய படத்திற்காக இந்த லுக்கை அவர் கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.
ALSO READ | இதுதான் எனக்கு ரொம்ப பிடிச்ச சீரியல்.. நடிகர் விஜயின் தாயார் சொன்ன சூப்பர் அப்டேட்