Thalapathy 67 Pre Release Business: தமிழ் திரையுலகத்தில் வெளியாகும் படங்களுக்கும் எல்லாம் 100 கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அதன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
படத்தின் பூஜைகள், படத்தின் அப்டேட்கள் என்று மாறி, மாறி தினமும் வந்துகொண்டே இருப்பதால் விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த நிலையில், நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் தளபதி 67 படத்தை லலித்குமார் தயாரித்து வருகிறார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பே இன்னும் தொடங்காத நிலையில், படம் அதற்குள் ரூபாய் 100 கோடி வசூலை குவித்துள்ளது.
தளபதி 67 படத்தின் டிஜிட்டல் உரிமை அதாவது ஓ.டி.டி. வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனமான நெட்பிளிக்ஸ் கைப்பற்றியுள்ளது. சாட்டிலைட் உரிமையை இப்போதே சன் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது.
சாட்டிலைட் மற்றும் ஓ.டி.டி. உரிமைகள் மூலமாகவே சுமார் 150 கோடி வரை தளபதி 67 வசூல் ஈட்டியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. இது படக்குழுவினரையும், விஜய் ரசிகரையும் உற்சாகப்படுத்தியுள்ளது. தளபதி 67 படத்தில் நடிகர் விஜய் நிச்சயம் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில்தான் நடிப்பதாக ஏராளமான தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்த படத்தில் பிரபல நடிகர் அர்ஜூன், நடிகர் சஞ்சய்தத், மன்சூர் அலிகான், மேத்யூஸ், திரிஷா, பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இவர்களுடன் இயக்குனர் மிஷ்கினும் நடிக்கிறார். மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் உருவாகும் தளபதி 67 படத்தில் விக்ரம், ரோலக்ஸ் , அமர் கதாபாத்திரங்களுக்கு தொடர்பு இருக்குமா? என்பதே ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஆகும்.
இதனால் தளபதி 67 ஜூரம்தான் கோலிவுட்டில் தற்போது பரவி வருகிறது.