Wednesday, May 31, 2023
Homeசினிமாசினிமா செய்திகள்இந்த தீபாவளி சரவெடிதான்… கேங்ஸ்டர் கும்பலுடன் களமிறங்கும் லோகி..! மிரட்டப் போகும் தளபதி 67..!

இந்த தீபாவளி சரவெடிதான்… கேங்ஸ்டர் கும்பலுடன் களமிறங்கும் லோகி..! மிரட்டப் போகும் தளபதி 67..!

கோலிவுட் வட்டாரத்தையே இப்போது பரபரப்பாக்கி வைத்திருப்பவர் லோகேஷ் கனகராஜ், மாநகரம் என்ற படம் மூலமாக இயக்குனராக திரைத்துறைக்குள் அடியெடுத்து வைத்தவர் கைதி, மாஸ்டர் படங்கள் மூலம் மாஸ் காட்டியதுடன் விக்ரம் படம் மூலமாக தனக்கெரு ஒரு தனி யுனிவர்சை உருவாக்கி விட்டார்.

இதனால், அவர் அடுத்தடுத்து எடுக்கும் படங்கள் எல்லாம் அவெஞ்சர்ஸ் போல லோகி யுனிவர்சாகவே இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆசைப்படுகின்றனர். அந்த யுனிவர்சில் விஜய்யும், அஜித்தும் வர வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் மிகப்பெரிய ஆசையாக உள்ளது.

தற்போது லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்தை இயக்க உள்ளார். இதற்காக நேற்று விஜய் – லோகேஷ் கனகராஜ் இணைந்து வெளியிட்ட ஸ்டில்ஸ்கள் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இன்று தளபதி 67 படக்குழுவினர் காஷ்மீருக்கு படப்பிடிப்புக்காக சென்றுள்ளனர்.

விக்ரம் படத்தில் கமல்ஹாசனுடன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் ஆகியோருடன் இறுதியில் சூர்யாவை காட்டி மிரட்டிய லோகேஷ் கனகராஜின் இந்த படத்தில் பட்டியலே நீண்டு கொண்டு போகிறது. இந்த படத்தில் நிச்சயம் விஜய் மாஸான கெட்டப்பில் வருவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.

இவர்களுடன் பாலிவுட் பிரபலம் சஞ்சய் தத் இணைந்துள்ளார். கே.ஜி.எப். படம் மூலம் தென்னிந்தியாவிலும் பட்டி தொட்டியெங்கும் அதிராவாக மிரட்டிய சஞ்சய் தத் இந்த படத்தில் விஜய்க்கு நிகராக மிரட்டுவார் என்று எதிர்பார்க்கலாம். இவர்களுடன் கௌதம் மேனன், மன்சூர் அலிகான் ஆகியோர் நடிக்கின்றனர்.

அஜித்துடன் மங்காத்தாவில் மிரட்டிய அர்ஜூன் இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து மிரட்டுகிறார். இதற்காக அவரது கெட்டப் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், சத்யராஜூம் நடிக்க உள்ளதால் இந்த படத்தில் ஆக்ஷனுக்கு மட்டும் பஞ்சமிருக்காது என்று உறுதியாக நம்பலாம். இந்த நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய்யுடன் திரிஷா இணைந்துள்ளார். அவர் தளபதி 67ல் இருக்கிறாரா? என்று சந்தேகம் இருந்த நிலையில் அவர் இன்று படப்பிடிப்புக்கு சென்றுள்ளார்.

மேலும், விக்ரம் படம் இந்த படத்துடன் கனெக்ட் ஆகுமா? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு இருப்பதால் இப்போது முதலே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் மிகப்பெரிய பட்டாளங்களுடன் களமிறங்கியிருப்பது ரசிகர்களை மிகவும் குஷியாக்கியுள்ளது.