சென்னை: நடிகர் சிம்புவின் பத்துதல படத்தின் பிஸ்னஸ் சிறப்பாக சென்று கொண்டு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
ஒபிலி என் க்ரிஷ்னா இயக்கத்தில் பத்து தல படத்தில் நடிகர் சிம்பு நடித்து உள்ளார். இந்த படத்தின் ஒரு சில பிளாஷ்பேக் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. பிசினஸ் ரீதியாக சிம்புவின் பெரிய படமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியானது. சிம்பு மிரட்டலான தோற்றத்துடன் சிறப்பாக நடித்து இருக்கும் காட்சிகள் வெளியானது. ஏ ஆர் ரகுமானின் பிஜிஎம்மும் அதிக கவனம் பெற்றது.
கர்நாடகாவில் ஹிட் அடித்த மப்டி படத்தின் ரீ மேக் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் டிரெய்லர் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அதை வாங்க பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதை டிவி ரைட்ஸ் விரைவில் விற்பனை ஆக உள்ளதாம். இரண்டு பெரிய சேனல்கள் இதற்காக தீவிரமாக முயன்று வருகிறதாம்.
அதேபோல் ஓடிடி ரைட்ஸ் இதுவரை சிம்பு படங்களுக்கு செல்லாத விலையில் செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் இந்த படத்தின் ஆடியோ லாஞ்ச் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆடியோ லாஞ்சில் ஏ ஆர் ரகுமான் கலந்து கொள்ள இருக்கிறார்.
இன்னொரு வடஇந்திய பிரபலமும் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடந்து கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.
ALSO READ | பிக் நியூஸ்.. கைகோர்க்கும் ஜூனியர் என்டிஆர் – தனுஷ்.. வெற்றிமாறன் இயக்கம்.. ஆஹா சூப்பர்