Friday, September 17, 2021
Home சினிமா மிரட்டல் லுக்.. வெளியானது சிம்புவின் 'ஈஸ்வரன் ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!!

மிரட்டல் லுக்.. வெளியானது சிம்புவின் ‘ஈஸ்வரன் ‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!!

சென்னை: சுசீந்திரன் இயக்கும் சிம்புவின் 46 வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ஈஸ்வரன் என்று பெயரிடப்பட்டுள்ளது.

கழுத்தில் பாம்புடன் இருக்கும் போஸ்டர் வெளியாகியுள்ளது. இது சிம்புவின்  ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

வருகிற 2021 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை அன்று சிம்புவின் ஈஸ்வரன் படம் ரிலீஸ் ஆகிறது.

காலை முதல் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #SilambarasanTR46, #STR46 போன்ற ஹாஷ் டேகுகள் ட்ரெண்ட் ஆகி வந்தது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அக்டோபர் 26 ஆம் தேதி விஜயதசமி அன்று வெளியிடப்படும் என்று படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து இன்று சரியாக 12 :12 மணிக்கு பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

 

இந்த படத்தில் பிரபல நடிகை நந்திதா ஸ்வேதா கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். இவர் சிம்புவுக்கு தங்கையாக நடிப்பதாகக் கூறப்படுகிறது.

நடிகை நிதி அகர்வால் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடந்து வருகிறது. இதில் பிரபல இயக்குனர் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஒஸ்தி, வாலு படங்களுக்கு இசை அமைத்த தமன் இந்த படத்துக்கும் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது..

- Advertisment -

Most Popular

தோல்வியில் முடிந்த டிரம்பின் முயற்சி.. அசுர வளர்ச்சி அடைந்த வடகொரியா.. பிடனுக்கு காத்திருக்கும் சவால்!

வடகொரியாவின் பொருளாதாரத்தை உலக நாடுகளிடம் இருந்து துண்டிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முயற்சிக்கு ஓரளவு வெற்றி கிடைத்தாலும் கூட இந்த நடவடிக்கை வடகொரியாவின் ராணுவத்தை மேம்படுத்தும் கிம் ஜோங் உன்னின் முயற்சியில்...

என்னதான் நடக்குது? அடுத்தடுத்து வீரர்களுக்கு ஏற்படும் காயம்.. இந்திய அணியில் நீடிக்கும் சிக்கல்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதாவிற்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து இந்திய அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இவருடன் சேர்த்து இந்திய...

நகர்ந்து வரும் மிகப்பெரிய பனிப்பாறை.. திடீரென எழுப்பப்பட்ட அபாய ஒலி.. A68a பற்றிய முழு விளக்கம்

அண்டார்டிகாவில் இருந்து மிகப்பெரிய ஐஸ்கட்டி பாறையான A68 நகர்ந்து வருவது பென்குயின் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்கள் சிலவற்றுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிகரிக்கும் புவி வெப்பமயமாதலால் உலகம்...

நிலைமை சரியில்லை.. இப்படியே போனால் ஆஸ்திரேலியா-சீனா உறவு மோசமாகும்.. எச்சரிக்கும் நிபுணர்கள்

சிட்னி: ஆஸ்திரேலியா- சீனா இடையேயான உறவு வரும் 2021 ஆம் ஆண்டு மேலும் மோசமடைவதற்கு வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆஸ்திரேலியா தாமாக முன்வந்து நிலைமையை சரிசெய்யாத வரை எதுவும் மாறப்போவதில்லை என்றும்...

Recent Comments