Thursday, June 1, 2023
Homeசினிமாசினிமா செய்திகள்வெயிட்டிங் இஸ் ஓவர்ர்ர்..! ஹாட்ஸ்டாரில் ரிலீசானது அண்ணாச்சியின் ஆக்ஷன் அவதாரம் லெஜண்ட்.!

வெயிட்டிங் இஸ் ஓவர்ர்ர்..! ஹாட்ஸ்டாரில் ரிலீசானது அண்ணாச்சியின் ஆக்ஷன் அவதாரம் லெஜண்ட்.!

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு ஆண்டும் மறக்க முடியாத பல படங்கள் வருவது உண்டு. அவ்வாறு அந்த படங்களை நாம் மறக்க முடியாமல் போவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அந்தவகையில் கடந்தாண்டு வெளியான திரைப்படங்களில் சமூக வலைதளங்களில் மிகுந்த கவனத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திய படம் லெஜண்ட்.

ஹாட்ஸ்டாரில் ரிலீஸ்:

பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட லெஜண்ட் படம் திரையரங்கில் வெளியாகி வசூலை வாரிக்குவிக்காவிட்டாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கத் தவறவில்லை. அதற்கு காரணம் நமது லெஜண்ட் சரவணன்தான். இந்த படத்தை திரையரங்கில் பார்க்கத் தவறிய ரசிகர்களுக்கு இன்ப விருந்தாக லெஜண்ட் இன்று ஓடிடியில் ரிலீசாகியுள்ளது.

முன்னணி ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் லெஜண்ட் படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை நடிகர் லெஜண்ட் சரவணன் தனது ட்விட்டர் பக்கம் மூலமாக உறுதி செய்துள்ளார். திரையரங்குகளில் லெஜண்ட் படத்தை பார்க்கத் தவறிய ரசிகர்கள் ஓடிடி-யில் லெஜண்ட் படத்தை பார்த்து ரசிக்கலாம்.

பிரம்மாண்ட எதிர்பார்ப்பு

நமது சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் விளம்பரங்களில் ஹன்சிகா, தமன்னா ஆகியோருடன் ஜோடி போட்ட வேகத்தில் திரையிலும் கால்தடம் பதித்தார். அவரது விளம்பர படங்களை இயக்கிய ஜேடி – ஜெர்ரி ஆகியோரே லெஜண்ட் படத்தையும் இயக்கினர். அண்ணாச்சி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் லெஜண்ட் சரவணன் நாயகனாக அறிமுகமாகிறார் என்ற தகவல் வெளியானதுமே கோலிவுட்டே பரபரப்பாகியது.

ALSO READ | அப்பாடா.. அண்ணாச்சி உடைத்த சஸ்பென்சால் நிம்மதி மூச்சுவிட்ட விஜய் ரசிகர்கள்..!

பட அறிவிப்பு வெளியானது முதல் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட கலைஞர்கள் வாயை பிளக்க வைத்தனர். இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ் கமிட் ஆகியுள்ளார் என்று தெரியவந்ததும் ரசிகர்கள் வாயை பிளந்தனர் என்பதே உண்மை. கேமராமேனாக வெற்றிமாறன் படங்களில் பணியாற்றிய வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, பிரபு, விவேக் உள்ளிட்டோருடன் பிரபல இந்தி நடிகைகள் நாயகிகளாக நடிக்க பிரம்மாண்ட பொருட்செலவில் லெஜண்ட் உருவானது.

சஸ்பென்ஸ்

சிறுவயது முதல் நடிக்க வேண்டும் என்ற தனது ஆசையை லெஜண்ட் சரவணன் நிறைவேற்றிக் கொண்டதாக அவரே பேட்டிகளில் அறிவித்தார். கடந்த சில நாட்களாக சஸ்பெண்ஸ், சஸ்பென்ஸ் என்று ரசிகர்களை காஷ்மீரில் இருந்து திக், திக் அடைய வைத்துக் கொண்டிருந்த லெஜண்ட், அந்த சர்ப்ரசை நேற்று உடைக்கவும்தான் ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.