Monday, May 29, 2023
Homeசினிமாசினிமா செய்திகள்யதார்த்தமா ஹாரர் திரில்லர் ரோமன்சம்..! மிஸ் பண்ணிடாதீங்க..!

யதார்த்தமா ஹாரர் திரில்லர் ரோமன்சம்..! மிஸ் பண்ணிடாதீங்க..!

இந்திய சினிமாவிலே தனக்கென தனி முத்திரையை பதித்த திரையுலகம் மலையாள திரையுலகம். அதற்கு காரணம் மலையாள படங்களில் உள்ள யதார்த்தமே ஆகும். யதார்த்த படங்கள் அளவிற்கு திரில்லர் படங்களும் அழகாக ஏராளமான படங்கள் மலையாளத்தில் வெளியாகியுள்ளது.

அந்த வகையில், கடந்த பிப்ரவரி மாதம் 3-ந் தேதி மலையாளத்தில் வெளியான படம் ரோமன்சம். இந்த படம் தற்போது தமிழ் உள்பட 4 மொழிகளில் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. ஒரு பேய் படத்தை எவ்வளவு யதார்த்தமாகவும், அதேசமயம் விறுவிறுப்பாகவும். நகைச்சுவையாகவும் காட்ட முடியுமோ அந்தளவு யதார்த்தமாக காட்டியுள்ளனர்.

நமது கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை நாம் கேள்விபட்ட ஓஜா போர்ட் கதையின் மையமாக இருந்தாலும், தேவையில்லாத பயமுறுத்தும் சத்தமோ, இருட்டோ. பேய்க்கு ப்ளாஷ்பேக்கோ என்று நாம் பார்த்து பார்த்து பழகியதை திணிக்காமல் யதார்த்தமாக அதை காட்டி இயக்குனர் நம்மை கட்டிப்போட்டியுள்ளார் என்றே கூறலாம்.

பேச்சிலர்ஸ் அறையும், அந்த அறையில் தங்கியிருப்பவர்களின் நிலையையும் காட்டி அவர்களின் பொழுதுபோக்கு எவ்வாறு மாறிப்போகிறது என்பதையும் சனு தாஹரின் கேமரா அழகாக படம்பிடித்து காட்டியுள்ளது. ஜிபினின் நண்பன் வந்த பிறகு இன்னும் சூடுபிடிக்கிறது. அதுவும் அவர் நள்ளிரவில் தனியாக செல்வதும். அவரை பின்தொடர்ந்து நண்பர்கள் இருவர் செல்வதும், அவர்களிடம் அவர் அனாமிகா என்ற பெயரை சொல்லும்போது படம் பார்க்கும் நமக்கே ஒரு கணம் பயமும், விறுவிறுப்பும் தொற்றிக் கொண்டது என்றே கூறலாம்.

வழக்கமாக இப்படிப்பட்ட கதைகளை மசாலா படங்களாக எடுத்திருந்தால் இந்த கதைக்கு கிளைமேக்ஸ் என்ற ஒன்று தேவைப்பட்டிருக்கும். ஆனால், இந்த படத்தில் கிளைமேக்சாக இல்லாமல் ஜிபினின் நண்பனும், அனாமிகாவும் இணைந்து வருவது போல முடித்திருப்பது படம் பார்க்கும் நமக்கே ஒரு முழு திருப்தியையும், அடுத்து என்ன நடந்திருக்கும் என்ற கேள்வியையும் ஏற்படுத்துகிறத என்பதே உண்மை.

இதில், ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த சம்பவங்கள் அனைத்தும் பெங்களூரில் 2007ம் ஆண்டு நடந்த 7 பேச்சிலர்ஸ் வாழ்வில் நடந்த சம்பவம் என்பது ஆகும். இந்த படத்தை ஜிது மாதவன் இயக்கியுள்ளார்., யதார்த்தமான கதைக்களம், பேச்சிலர்ஸ் வாழ்க்கை, நண்பர்களாக தங்கியிருக்கும் ஏற்படும் சிக்கல்கள், பொழுதுபோக்கு ஆகியவற்றை மிக அழகாக காட்டியிருக்கும் ரோமன்சம் படத்தை கட்டாயம் பாருங்கள்.

ALSO READ | விக்னேஷ் சிவன் டைரக்ஷனில் பிரதீப் ரங்கநாதன்..? கம்பேக் தருவாரா நயன்தாரா கணவர்?