Saturday, May 27, 2023
Homeசினிமாசினிமா செய்திகள்பார்க்கவே அப்படியே.. எலும்பும் தோலுமா மாறிய ரோபோ சங்கர்.. அப்படி என்னதான் ஆனது?

பார்க்கவே அப்படியே.. எலும்பும் தோலுமா மாறிய ரோபோ சங்கர்.. அப்படி என்னதான் ஆனது?

சென்னை: நடிகர் ரோபோ ஷங்கர் எலும்பும் தோலுமாக காட்சி அளிக்கும் புகைப்படம்
ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை வைத்து நெட்டிசன்கள் பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

நடிகர் ரோபோ ஷங்கர் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். தற்போது பல டிவிகளில் நிகழ்ச்சிகளிலும் இவர் கலந்து கொண்டு வருகிறார். அதேபோல் பல படங்களிலும் இவர் நடிப்பதால் அதிகம் பிஸியான நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.

பல முக்கிய படங்களில் அவர் பல காமெடியனாக நடிக்க கமிட் ஆகியும் உள்ளார். இப்போது அவர் தனது உடை எடையை குறைத்து சர்ச்சையில் சிக்கி உள்ளார்.  சமீபத்தில் அவரது வீட்டில் வெளிநாட்டு கிளிகள் வளர்த்த காரணத்தால் செய்திகளில் வந்தார். அவரின் அலெக்ஸ்சாண்டர் கிளிகளை வனத்துறை கைப்பற்றியதோடு அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது ரோபோ ஷங்கர் எலும்பும் தோலுமாக காட்சி அளிக்கும் போட்டு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை வைத்து நெட்டிசன்கள் பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.Robo Shankar look completely changed, what happened to him suddenly?
அவருக்கு ஏதாவது நோய் ஏற்பட்டு உள்ளதா? அவர் ஏன் இப்படி இருக்கிறார்? அவர் ஏன் நோயாளி போல் இருக்கிறார் ? ரோபோ ஷங்கருக்கு என்ன ஆனது? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது தொடர்பாக அவருக்கு நெருக்கமான நபர்களிடம் விசாரித்தோம். அவர்கள் சொன்ன தகவலில்.. அவர் தனது உடல் எடையை மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி டயட் இருந்து குறைத்துள்ளார். மற்றபடி நோய் எதுவும் இல்லை என்று விளக்கி உள்ளனர்.

ALSO READ | அட்ஜஸ்ட் பண்றீயா? சீரியல் நடிகையிடம் கேட்ட “தலை”.. அப்படியே ஓடிய பெண்.. என்னாச்சு?