சென்னை; பல ஆயிரம் கோடி சொத்திற்காக பவித்ரா இப்போது மூன்றாவது திருமணம் செய்து கொண்டார் என்று அவரின் முன்னாள் கணவர் சுரேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார்.
60 வயதாகும் தெலுங்கு நடிகர் நரேஷ். இவர் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இவரின் திருமனம் பெரிய அளவில் விவாதம் ஆனது. காரணம் இவர் 44 வயதாகும் நடிகை பவித்ரா லோகேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் நரேஷுக்கு இது நான்காம் திருமணம். பவித்ராவுக்கு இது மூன்றாம் திருமணம்.
இதனால் இணையம் முழுக்க இது பெரிய சர்ச்சையானது. ஆனால் அவர்கள் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். அவர்கள் காதலித்து வருவதாக முன்பே அறிவித்து இருந்தனர். இதனால் இவர்கள் திருமணம் கிட்டத்தட்ட எல்லோரும் எதிர்பார்த்த ஒன்றுதான்.
திருமணத்திற்கு முன்பே 2 வருடங்களாக இவர்கள் ஒன்றாக வசிக்க தொடங்கிவிட்டனர். ஒரே வீட்டில் இவர்கள் லிவ்இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் பல ஆயிரம் கோடி சொத்திற்காக பவித்ரா இப்போது மூன்றாவது திருமணம் செய்து கொண்டார் என்று அவரின் முன்னாள் கணவர் சுரேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார்.
அதன்படி அந்த பெண் மோசக்காரி. காசு கிடைக்கும் என்றால் எங்கே வேண்டும் என்றாலும் செல்வார். அப்படித்தான் இவர் 1500 கோடி ரூபாய் பணத்திற்கு ஆசைப்பட்டு தற்போது அவரை திருமணம் செய்து இருக்கிறார். இதில் வேறு காதல், அன்பு எல்லாம் இல்லை. முழுக்க முழுக்க பணத்திற்காக நடந்த திருமணம் இது என்று அவர் கூறி உள்ளார்.
ALSO READ | நடிக்கட்டுமா? ஆசையாக கேட்ட அம்மா ஷோபானா.. நோ சொன்ன விஜய்.. ஏன் தெரியுமா?