சென்னை: டான்சர் அமீரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டது தொடர்பாக நடிகை பாவனி ரெட்டி பேட்டி அளித்துள்ளார். முதல் கணவர் இறந்ததும் இரண்டாவது திருமணம் செய்து கொண்டது பற்றி அவர் பேசி உள்ளார்.
நடிகை பாவனி ரெட்டி சீரியல்களில் நடித்து வந்தார். இவரின் முதல் கணவர் அவரின் கண் முன்னே தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த தற்கொலை குறித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போது நடிகை பாவனி ரெட்டி பேசி இருந்தார். அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமீர் பாவனி ரெட்டியை காதலிப்பதாக கூறினார். முதலில் அவர் விளையாட்டாக கூறுவது போல இருந்தது.
ஆனால் அதன்பின்தான் பாவனி ரெட்டியை அமீர் தீவிரமாக காதலிப்பது தெரிய வந்தது. வெளியே வந்ததும் இவர்கள் டேட்டிங் செய்து கொண்டு இருந்தனர். அதன்பின் அமீர் காதலையும் பாவனி ரெட்டி ஏற்றுக்கொண்டார். அதன்பின் இவர்கள் திருமணமும் செய்து கொண்டனர்.
இந்த நிலையில்தான் பாவனி ரெட்டியை பலரும் இணையத்தில் கிண்டல் செய்து வருகின்றனர். முதல் கணவன் இறந்துவிட்டான். அதன்பின் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். இது சரியா என்று பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.
இதற்கு தற்போது பாவனி ரெட்டி பதிலடி கொடுத்துள்ளார். அதில், முதல் கணவன் இறந்த பின்பே நான் இரண்டாவது திருமணம் செய்தேன். பல ஆண்கள் இப்படி செய்கிறார்கள். ஆனால் அதை பற்றி எல்லாம் யாரும் இங்கே பேசுவது இல்லை. பெண்கள் திருமணம் செய்தால்தான் இவர்களுக்கு பிரச்சனை என்று குறிப்பிட்டு உள்ளார்.
ALSO READ | கதற கதற.. 8 வயதில்.. என் அப்பாவே எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.. குஷ்பு ஷாக் தகவல்