ரசிகர்களுக்கு வீட்டிலேயே சினிமாவை கொண்டு வந்து தொலைக்காட்சி சேர்த்தது என்றால், அதை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்சென்றது ஓடிடி தளம் என்றே கூறலாம். இன்று திரையரங்குகளில் வாய்ப்பு கிடைக்காத படங்கள் ஓடிடியில் வெளியாகி வரவேற்பை பெறுகின்றன.
இந்த வாரம் ஓடிடி-யில் என்னென்ன படங்கள் ரிலீசாகிறது என்பதை கீழே விரிவாக காணலாம்.
1. வாரிசு
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் வாரிசு. விமர்சனங்கள் எழுந்தாலும் குடும்பங்களின் வருகையை பெற்று வெற்றிப்படமாக அமைந்தது. சரத்குமார், ஜெயசுதா, ஷாம், எஸ்.ஜே.சூர்யா என மிகப்பெரிய பட்டாளமே நடித்த இந்த படம் வரும் 22-ந் தேதி அமேசானில் ரிலீசாகிறது.
2. இரு துருவம் – 2:
சோனி லைவ் ஓ.டி.டி.யில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற வெப்சீரிஸ் இரு துருவம். இதன் 2ம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. நந்தா நடித்துள்ள இந்த சீரிஸ் வரும் 24-ந் தேதி சோனி லைவ் ஓடிடியில் ரிலீசாகிறது.
3. வீரசிம்ஹா ரெட்டி:
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான வீரசிம்ஹா ரெட்டி வசூல் ரீதியாக நல்ல வெற்றி பெற்றது. பாலய்யா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலரும் நடித்த ஆக்ஷன் பேமிலி என்டர்டெயின்மெண்ட் மூவியான இந்த படம் வரும் 23-ந் தேதி ஹாட்ஸ்டாரில் ரிலீசாகிறது.
4. தங்கம்:
திருச்சூரில் நடைபெறும் தங்க வர்த்தகத்தை மையமாக வைத்து பிஜூ மேனன், வினித் ஸ்ரீனிவாசன், வினீத் தட்டிட் டேவிட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள தங்கம் என்ற மலையாள படம் கடந்த 25-ந் தேதி ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் 22-ந் தேதி வெளியாக உள்ளது.
5. நண்பகல் நேரத்து மயக்கம்:
மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டாரான மம்மூட்டி நடிப்பில் வெளியாகிய படம் நண்பகல் நேரத்து மயக்கம். கடந்த 19-ந் தேதி வெளியான இந்த படத்தில் மம்மூட்டியுடன் ரம்யா பாண்டியன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படம் நெட்பிளிக்சில் வரும் 23-ந் தேதி ரிலீசாக உள்ளது.