உலகம் முழுவதும் ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கியுள்ள ஆஸ்கர் விருதுகள் அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
இந்த தருணத்தில் 95 ஆண்டுகால ஆஸ்கர் வரலாற்றில் அதிக ஆஸ்கர் விருதகளை வென்ற திரைக்கலைஞர்களை பார்க்கலாம்.
கேத்ரீன் ஹெப்பர்ன்:
ஹாலிவுட் திரையுலகை தன் நடிப்பாலும், அழகாலும் அந்த காலத்தில் கட்டிப்போட்டவர் கேத்ரீன் ஹெப்பர்ன். இவர் தன்னுடைய நடிப்புலக வாழ்க்கையில் 12 முறை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். 1934ம் ஆண்டு முதன்முறையாக மார்னிங் க்ளோரி எனும் படத்திற்காக சிறந்த நடிகைக்காக ஆஸ்கர் விருது வென்றார். பின்னர், நீண்ட இடைவெளிக்கு பிறகு 1968, 1969 மற்றும் 1982 ஆகிய காலகட்டங்களிலும் ஆஸ்கர் விருதை வென்று நான்கு முறை ஆஸ்கர் விருதை வென்றுள்ளார்.
பிரான்ஸின் மெக்டோர்மண்ட்:
ஹாலிவுட்டின் பிரபல நடிகையாக ப்ரான்ஸஸ் மெக்டோர்மண்ட் 7 முறை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு பார்கோ, த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிஸ்ஸோரி ஆகிய படங்களுக்கு சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளார். மேலும் நடிகையாக அல்லாமல் ஒரு தயாரிப்பாளராக நோமட்லேண்ட் படத்திற்கு ஆஸ்கர் விருதை வென்றார்.

மேரில் ஸ்ட்ரீப்:
ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகை மேரில் ஸ்ட்ரீப். இவர் இதுவரை டோனி முதல் கிராமி வரை 200 விருதுகளை வென்றுள்ளார். ஆஸ்கர் விருதுக்காக இதுவரை 21 முறை நாமினேட் செய்யப்பட்டுள்ள இவர் 3 முறை ஆஸ்கர் விருது வென்றுள்ளார். 2 முறை சிறந்த நடிகை, 1 முறை துணை நடிகைக்கான ஆஸ்கர் விருது வென்றுள்ளார்.
ஜேக் நிகோல்சன்:
1989ம் ஆண்டு வெளியான பேட்மேன் படத்தில் ஜோக்கராக நடித்து மிகவும் புகழ்பெற்ற ஜேக் நிகோல்சன் 3 முறை ஆஸ்கர் விருது வென்றுள்ளார். இந்த மூன்று விருதுகளுமே சிறந்த நடிகருக்காக ஒஜன் ப்ளூ ஓவர் தி குக்கூஸ் நெஸ்ட், டெர்ம்ஸ் ஆஃப் எண்டெயர்மெண்ட், அஸ் குட் அஸ் இட் கெட்ஸ் படங்களில் நடித்துள்ளார்.
இன்ங்ரிட் பெர்ஜ்மன்:
சுவிட்சர்லாந்து நாட்டு நடிகையான இங்கிரிட் பெர்ஜ்மன் 1948 முதல் 1978ம் ஆண்டு வரையில் 8 முறை ஆஸ்கருக்கு நாமினேட் செய்யப்பட்டுள்ளார். 1944ம் ஆண்டு கேஸ்லைட் படத்தில் நடித்ததற்காக சிறந்த ஆஸ்கர் விருதை வென்றார். சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதையும் வென்றுள்ளார். மொத்தம் 3 ஆஸ்கர் விருதை இவர் வென்றுள்ளார்.

டேனியல் டே லீவிஸ்:
ஹாலிவுட்டின் மிகவும் புகழ்பெற்ற நடிகர் டேனியல் டே லீவிஸ். லிங்கன் படத்தில் அமெரிக்க அதிபர் ஆப்ரகாம் லிங்கனாக நடித்து மிகவும் புகழ்பெற்றவர். ஆறு முறை ஆஸ்கர் விருதுக்கு நாமினேட் செய்யப்பட்ட டேனியல் 3 முறை ஆஸ்கர் விருது வென்றுள்ளார். 3 விருதுகளுமே சிறந்த நடிகருக்காகவே வாங்கியுள்ளார்.
வால்டர் ப்ரென்னன்:
ஆஸ்கர் விருதுக்காக நான்கு முறை நாமினேட் செய்யப்பட்ட வால்டர் ப்ரெஸ்னன் சிறந்த துணை நடிகருக்கான 3 முறை ஆஸ்கர் விருது வென்றுள்ளார். 1936ம் ஆண்டு முதல் முதன்முறையாக ஆஸ்கர் விருது வென்றார்.
இவர்கள் தவிர டென்ஜெல் வாஷிங்டன், ஜோடி ஃபாஸ்டர் 2 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளனர்.