Tuesday, May 23, 2023
Homeசினிமாசினிமா செய்திகள்நீயா நானா நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறிய கோபிநாத்.. நடந்தது என்ன?

நீயா நானா நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறிய கோபிநாத்.. நடந்தது என்ன?

நீயா நானா நிகழ்ச்சியில் இருந்து கோபிநாத் பாதியில் வெளியேறும் காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பல ஆண்டுகளாக நீயா நானா நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் கோபிநாத். இவர் இந்த வாரம் கணவன் vs  திருமணத்திற்கு பின் அம்மா பேச்சை கேட்கும் மனைவி ஆகியோருக்கு இடையிலான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இதில் பேசிய பெண்கள், கணவன்கள் தங்களின் தங்களின் அம்மாக்கள்.. அதாவது மனைவிகளும் அம்மாக்கள் சொல்லும் உடையை உடுத்த வேண்டும். பெண் வீட்டார் ஏதாவது உடை போட சொன்னால் அதை போட வேண்டும். அவர்களின் கோரிக்கையை ஏற்க வேண்டும் என்று பெண்கள் குறிப்பிட்டு உள்ளனர்.

இதற்கு பதில் கேள்வி கேட்ட கோபிநாத்.. அப்படி என்றால்.. பெண்கள் அவர்களின் மாமியார் சொல்வதை கேட்பார்களா? அவர்களின் மாமியார் என்ன சொல்கிறார்களே அதை பெண்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று கேட்டார். இதற்கு  நாங்கள் அது எல்லாம் செய்யமாட்டோம். மாமியார் சொல்லும் உடையை எப்படி நாங்கள் உடுத்துவோம். மாமியார் சொல்வதை எல்லாம் கேட்க முடியாது என்று கூறி உள்ளனர்.

இதை கேட்டு கடுப்பான கோபிநாத்.. நீங்கள் உங்கள் மாமியார் சொல்வதை கேட்க மாட்டீர்கள். ஆனால் உங்கள் கணவன் மார்கள், உங்கள் அம்மாக்கள் சொல்வதை கேட்கவேண்டுமா? என்ன நியாயம் என்று கேட்டுள்ளார்.

இதற்கு அந்த பெண்கள் ஆம்.. அவர்கள் கேட்க வேண்டும் என்று பதில் சொல்லி உள்ளனர். இதனால் குழம்பிப்போன கோபிநாத்.. யாப்பா நான் ரிட்டையர் ஆகுறேன் என்று காமெடியாக சொல்லிவிட்டு நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறி உள்ளார். ஆனால் அவர் நிகழ்ச்சியில் இருந்து உண்மையாக ரிட்டையர் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.