நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் தீபாவளி தினத்தன்று ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இப்படத்தின் இயக்குனர்களில் ஒருவரான ஆர்.ஜே.பாலாஜி, ஐபிஎல் போட்டிகளுக்கு வர்ணனை செய்து வருகிறார். வர்ணனையின் போது படத்தின் புரமோஷன் பணிகள் இருப்பதால் அடுத்த 20 நாட்கள் வர்ணனை செய்யப் போவது இல்லை என்று கூறினார்.
இதை தொடர்ந்து மூக்குத்தி அம்மன் படம் ஓடிடி ரிலீசாவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றே கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள ஆர்.ஜே.பாலாஜி, இயக்குனர் என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி உள்ளார். வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் இப்படத்தை தயாரித்துள்ளார்.