தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வருபவர் விஜய், இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. படத்தின் அப்டேட்டுகளும், படக்குழு அவ்வப்போது வெளியிட்டு வரும் போட்டோக்களும் ரசிகர்களை குஷியடைய வைத்துக் கொண்டே இருந்தது.
சஸ்பென்ஸ் வைத்த அண்ணாச்சி:
இந்த நிலையில், லியோ படத்தின் ஷூட்டிங் மும்முரமாக காஷ்மீரில் நடந்து கொண்டிருந்த அதேவேளையில் தமிழ்நாடு முழுவதும் பிரபலமான அண்ணாச்சி லெஜண்ட் சரவணன் காஷ்மீரில் இருந்து சர்ப்ரைஸ் காத்திருக்கிறது ரசிகர்களே என்று ட்விட் பதிவிட்டுக் கொண்டிருந்தார். ஆரம்பத்தில் அவர் காஷ்மீரில் இருப்பது போன்ற புகைப்படங்களே ரசிகர்கள் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்தியது. காஷ்மீரில் இருந்து சஸ்பென்ஸ் காத்திருக்கிறது என்று பதிவிட்டதும் விஜய் ரசிகர்களும், லோகேஷ் கனகராஜ் ரசிகர்களும் மிகுந்த குழப்பத்திற்கு ஆளாகினர்.
ஒரு வேளை லியோ படத்தில் லெஜண்ட் சரவணாவும் நடிக்கிறாரோ? என்று விஜய், லோகேஷ் கனகராஜ் ரசிகர்கள் மண்டையை பிய்த்துக்கொள்ளாத குறைக்கு ஆளாகினர். ஒருவேளை லியோ படத்தில் லெஜண்ட் நடித்தால் என்ன கதாபாத்திரத்தில் நடிப்பார்? ரோலக்ஸ் போல மிரட்டும் கெட்டப்பில் அவர் நடிப்பாரா? அல்லது காஷ்மீரில் உள்ள தொழிலதிபர் போல ஒரு காட்சியில் மட்டும் வந்து போவாரா? என்று பல கேள்விகள் இணையத்தில் மீம்ஸ்களாகவும், செய்திகளாகவும் உலா வந்தன.
நிம்மதி
ஒருவேளையாக ரசிகர்களுக்கு இத்தனை நாட்களாக வைத்திருந்த சஸ்பென்சை லெஜண்ட் உடைத்துள்ளார். லெஜண்ட் படம் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது என்ற சஸ்பென்சையே காஷ்மீரில் இருந்து புகைப்படங்கள் மூலம் ரசிகர்களை திக்குமுக்காட வைத்துக்கொண்டிருந்தார் நமது அண்ணாச்சி. ஒருவழியாக அண்ணாச்சி லெஜண்ட் படம் ஓடிடி-தான் சஸ்பென்ஸ் என்பதை உடைத்துவிட்டதால் தற்போது விஜய், லோகி ரசிகர்கள் நிம்மதி மூச்சுவிட்டுள்ளனர். காலம் எதை வேண்டுமானாலும் மாற்றலாம். நமது அண்ணாச்சி லெஜண்ட் சரவணன் கூட லோகி யுனிவர்ஸில் வரும் காலம் கூட வரலாம்.