Tuesday, May 23, 2023
HomeசினிமாHeroesலியோ படத்தில் ஆண்டவர் தரிசனம்..! துள்ளிக்குதிக்கும் கமல் ரசிகர்கள்..!

லியோ படத்தில் ஆண்டவர் தரிசனம்..! துள்ளிக்குதிக்கும் கமல் ரசிகர்கள்..!

நடிகர் விஜய்க்கு இந்தாண்டு மகிழ்ச்சியான ஆண்டாகவே அமையும் என்று கூறலாம். பொங்கலுக்கு ரிலீசான அவரது வாரிசு படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் படம் வசூலை குவிக்கத் தவறவில்லை. இதனால், வாரிசு வெற்றிப்படமாகவே அமைந்தது.

வாரிசு படப்பிடிப்பின்போது விஜய்யின் அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கப்போவதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. வாரிசு படம் வெளியாகிய சில நாட்களிலே லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படப்பிடிப்பை தொடங்கினார். தளபதி 67-க்கு லியோ என்று டைட்டிலும் வைக்கப்பட்டு தற்போது காஷ்மீரில் லியோ ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விக்ரம் படத்தில் கைதி படத்தையும் இணைத்து லோகேஷ் யுனிவர்ஸ் என்ற ஒன்றை லோகேஷ் கனகராஜ் உருவாக்கி அதன்மூலம் தமிழ் சினிமாவில் யுனிவர்ஸ் வெர்சனை தொடங்கி வைத்துள்ளார். தற்போது அவர் எடுத்து வரும் லியோ படமும் லோகேஷ் கனராஜின் யுனிவர்ஸ் வெர்சனாகவே எடுக்கப்படுகிறது.

இதனால், கைதி, விக்ரம் படங்களுக்கும் லியோ படத்திற்கும் தொடர்பு இருக்கும் என்று தொடக்கம் முதலே எதிர்பார்ப்புகள் இருந்து வருகிறது. ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், தற்போது லேட்ட்ஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, லியோ படத்தில் முக்கிய காட்சி ஒன்றில் கமல்ஹாசன் விக்ரம் கதாபாத்திரமாகவே நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியது.

விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்து சூர்யா எப்படி மிரட்டினாரோ, அதேபோல விக்ரம் படத்திலும் கமல்ஹாசனுக்கு காட்சி வைக்கப்படும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். லியோ படத்தில் கமல்ஹாசன் காட்சியுடன் வேறு ட்விஸ்ட் ஏதும் இருக்குமா? என்றும் காத்திருப்போம்.