சென்னை: நயன்தாரா கோலிவுட்டில் இருந்தே வெளியேறி.. சினிமாவிற்கு மொத்தமாக முழுக்க போட போவதாக செய்தி ஒன்று சினிமா உலகில் வட்டமடிக்க தொடங்கி உள்ளது.
சமீபத்தில் வாடகை தாய் முறை மூலம் இரட்டை குழந்தைக்கு நடிகை நயன்தாரா தாய் ஆனார். இந்த விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையானது. அதன்பின் அவர் கமிட் ஆகி இருந்த ஒரு படம் டிராப் ஆனது.
இது பெரிய சர்ச்சையானது. இந்த நிலையில் இன்னொரு பக்கம் அவரின் கணவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் கமிட் ஆகி இருந்த அஜித் படமும் டிராப் ஆனது. அவருக்கு மன ரீதியாக இந்த சம்பவம் பெரிய அழுத்தத்தை கொடுத்தது.
இந்த நிலையில்தான் நயன்தாரா சினிமா உலகில் இருந்தே வெளியேற திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்தியில் ஜவான் படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். அதுதான் அவரின் கடைசி இந்தி படம் என்று கூறப்படுகிறது.
அதன்பின் தமிழில் ஏற்கனவே கமிட் ஆகி உள்ள ஒரு படத்தை முடிக்க திட்டமிட்டு உள்ளாராம். மற்றபடி ஏற்கனவே அட்வான்ஸ் வாங்கிய படங்களின் பணத்தை திரும்ப கொடுத்துவிட்டாராம். இது போக இரண்டு பெரிய படங்களுக்கு அவர் செய்த ஒப்பந்தத்தையும் ரத்து செய்து இருக்கிறாராம்.
இவர் சோலோவாக நடித்த படங்கள் வரிசையாக தோல்வி அடைந்து வருகிறதாம். கடைசியாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதியுடன் ஒரு படம் நடிக்க உள்ளாராம். அதன்பின் அவர் நடிக்க மாட்டார் என்கிறார்கள்.
அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்த குழந்தைகளை கவனிக்க வேண்டும் என்பதால் அவர் நடிப்பதில் இருந்து வெளியேற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
ALSO READ | விஜே மணிமேகலை கர்ப்பமாக இருக்கிறாரா? குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறியது ஏன்?