சென்னை: நடிகை, தொகுப்பாளினி அர்ச்சனா தனது மகளை டிவோஸ் செய்ய முடிவு எடுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார். அதன்பின் நடந்த சில சம்பவங்கள் குறித்தும் அவர் விளக்கி உள்ளார்.
அர்ச்சனா மற்றும் அவரின் கணவர் வினீத் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். வினித் தற்போது இந்திய கடற்படையில் பணியாற்றி வருகிறார். இருவரும் வேறு வேறு துறை என்பதால் இவர்களுக்குள் அடிக்கடி சண்டை வந்துள்ளது.
அதோடு இவர்கள் ஒன்றாக இருக்காமல் வேறு வேறு இடங்களில் அடிக்கடி இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் இவர்களின் நெருக்கம் குறைந்து இடைவெளி அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அர்ச்சனா தனது கணவர் வினீத்தை விவாகரத்து செய்ய முடிவெடுத்து இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த விஷயத்தை அவரே பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். ஆனால் இவர்களுக்கு இடையில் புகுந்து ஸாரா சமாதானம் செய்துள்ளார். அவர் இவர்களின் மகள். நீங்கள் பிரிந்தால் நன்றாக இருக்குமா? உங்களுக்கு அது நல்லது தானா? என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். உங்களால் அப்படி வாழ் முடியுமா என்று பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து கடந்த 15 நாட்களாக கணவருடன் மிகவும் நெருக்கமாக இருப்பதாகவும். இனியும் நாங்கள் விவாகரத்து பற்றி பேச மாட்டோம். முன்பு காதலித்தது போலவே இப்போதும் நாங்கள் காதலித்து வருகிறோம். எங்கள் காதல் புதுப்பிக்கப்பட்டுவிட்டது என்று அர்ச்சனா குறிப்பிட்டு இருக்கிறார். ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்த இந்த பேட்டி பெரிய அளவில் டிரெண்டாகி உள்ளது.
ALSO READ | Viduthalai: சூரியை உச்சத்திற்கு கொண்டு செல்லப்போகும் விடுதலை!