Monday, May 29, 2023
Homeசினிமாசினிமா செய்திகள்இந்தியாவில் இத்தனை திரையுலகம் இருக்குதா..? இத்தனை நாளா இது தெரியாமா போச்சே…!

இந்தியாவில் இத்தனை திரையுலகம் இருக்குதா..? இத்தனை நாளா இது தெரியாமா போச்சே…!

இந்தியாவில் மிகப்பெரிய திரையுலங்களாக பாலிவுட், டோலிவுட், கோலிவுட், மோலிவுட், சான்டல்வுட் திரையுலகங்கள் அறியப்படுகிறது. அதாவது, இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட திரையுலகங்கள் அறியப்படுகிறது.

பல மொழி பேசும் இந்தியாவில் பன்முக கலாச்சாரம் கொண்ட இந்தியாவில் இந்த மொழிகளில் மட்டும்தான் திரைப்படங்கள் உருவாகிறதா? என்று கேட்டால் நிச்சயம் இல்லை. இந்தியாவில் 16 மொழிகளில் திரைப்படங்கள் உருவாகி, 16 மொழிகளில் இந்திய திரையுலகம் இயங்கி வருகிறது.

Film Industries In India Check List Types of Wood in Cinema

அசாமி திரையுலகம் | Assamese Cinema

அசாம் மக்களின் பூர்வீக மொழியான அசாமி மொழியில் இயங்கி வருகிறது அசாமி திரையுலகம். மிக நீண்ட பாரம்பரியம் கொண்ட அசாமி திரையுலகில் முதல் அசாமி திரைப்படம் 1935ம் ஆண்டு வெளிவந்தது.

படுகா திரையுலகம் | Badaga Cinema

தமிழ்நாட்டின் ஊட்டியில் வாழும் ஒரு இன மக்களே படுகாஸ் எனப்படுவார்கள். அவர்களது கலாச்சாரம், மொழி, பண்பாடு ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் படகா திரையுலகம் உள்ளது. 1979ம் ஆண்டு முதல் படுகா திரைப்படம் வெளியானது. கால தப்பிட்ட பயிலு, ஹோசா முங்கரு, காவாவா தேடி, சின்னத பூமி ஆகிய படங்கள் அவர்கள் மொழியில் வெளியான படங்கள்.

பெங்காலி திரையுலகம் | Bengali Cinema

இந்தியாவின் முக்கிய மாநிலமான மேற்கு வங்காளத்தின் தாய்மொழியான வங்காள மொழி திரையுலகம் 1919ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த திரையுலகத்தின் முதல் படம் பில்வாமாங்கல் ஆகும்.

Film Industries In India Check List Types of Wood in Cinema

போஜ்புரி திரையுலகம் | Bhojpuri Cinema

போஜ்புரி திரையுலகம் இந்தியாவின் 2ம் கட்ட திரைப்பட வர்த்தகம் நடக்கும் திரையுலகில் முதன்மையானது ஆகும. 1963ம் ஆண்டு முதல் போஜ்புரி திரையுலகம் செயல்பட்டுவருகிறது. சமீபகாலமாக போஜ்புரி படங்கள் இந்திய ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது.

Film Industries In India Check List Types of Wood in Cinema

குஜராத்தி திரையுலகம் | Gujarati Cinema

இந்தியாவின் பாரம்பரிய திரையுலகங்களில் குஜராத்தி திரையுலகமும் ஒன்றாகும். 1932ம் ஆண்டு முதல் குஜராத்தி மொழி திரைப்படம் வெளியானது. இந்தியில் கொடி கட்டி பறக்கும் பிரசி தேசாய், பூஜா பட், டினா அம்பானி, மகேஷ்பட், சஞ்சய்லீலா பன்சாலி, விபுல்ஷா உள்பட பல பாலிவுட் பிரபலங்கள் குஜராத்தி திரையுலகில் இருந்து வந்தவர்களே ஆவார்கள்.

கொங்கனி திரையுலகம் | Konkani Cinema

கொங்கனி மொழி பேசும் மக்களுக்கான திரையுலகம் கொங்கனி ஆகும். 1950ம் ஆண்டு மோகாசோ அன்வ்ட்டோ என்ற படம்தான் கொங்கனி மொழியில் வெளியான முதல் படம் ஆகும்.

மராத்தி திரையுலகம் | Marathi Cinema

மகாராஷ்ட்ரா மக்களின் தாய்மொழியான மராத்தி திரையுலகம் பாலிவுட்டிற்கு பிறகு வட இந்தியாவில் பெரிய திரையுலகம் ஆகும். 1912ம் ஆண்டு முதல் மராத்தி மொழி படம் வெளியானது.

ஒரியா திரையுலகம் | Oriya Cinema

ஒல்லிவுட் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் ஒரியா திரையுலகம் ஒடிசா மக்களின் திரையுலகம் ஆகும். 1936ம் ஆண்டு முதல் இயங்கி வரும் ஒரியா திரையுலகத்தின் முதல் படம் சீதா பிபாகா ஆகும்.

பஞ்சாபி திரையுலகம் | Punjabi Cinema

பஞ்சாப் மக்களின் திரையுலகம் பஞ்சாபி திரையுலகம் ஆகும். 1936ம் ஆண்டு முதல் பஞ்சாபி திரைப்படம் வெளியானது. பின் டி குடி என்ற படமே முதல் பஞ்சாபி படம் ஆகும்.

சிந்தி திரையுலகம் | Sindhi Cinema

சிந்தி பேசும் மக்களின் திரையுலகமே சிந்தி திரையுலகம் ஆகும். சோல்லிவுட் என்று ரசிகர்கள் அழைக்கும் இந்த சிந்தி திரையுலகத்தின் முதல் படம் 1958ம் ஆண்டு வெளியானது.

துலு திரையுலகம் |Tulu Cinema

தென்னிந்திய மொழியாக கருதப்படுவது துலு மொழியாகும். துலு மொழிக்காக 1971ம் ஆண்டு முதல் திரைப்படம் வெளிவந்தது. தொடக்கத்தில் 2, 3 படங்கள் ஆண்டுக்கு தயாரிக்கப்பட்டு வந்தது.

பல மொழி பேசும் இந்தியாவில் நாம் அறிந்த தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி தவிர மேற்கண்ட மொழிகளிலும் படங்கள் உருவாகி வருகிறது. ஆனால், அவர்களின் வர்த்தகம் குறைவு என்பதால் அந்த படங்கள் பெரியளவில் இதர மொழிகளிலும், இதர மாநிலங்களிலும் தெரிவதில்லை.

ALSO READ | ஹரி இயக்க போகும் போலீஸ் படம்.. ஹீரோவாக இணையும் முன்னணி நட்சத்திரம்