சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வரும் நடிகை கனிகாவிற்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இயக்குனர் திருச்செல்வம் இயக்கத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர் தற்போது பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. முக்கியமாக இதில் குணசேகரனாக நடிக்கும் மாரிமுத்து கதாபாத்திரம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் அவருக்கு மனைவியாக நடிக்கும் கனிகா கதாபாத்திரமும் வரவேற்பை பெற்றுள்ளது. தொடரில் புடவையில் வரும் இவர் இன்ஸ்டாகிராமில் ஹாட்டாக புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். முக்கியமாக இவர் ஷார்ட்ஸ் போட்டு அடிக்கடி இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.
இந்த நிலையில்தான் நடிகை கனிகாவிற்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு பைக்கில் செல்லும் போது இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பைக்கில் இருந்து விழுந்து அவர் முட்டியை முறித்துக்கொண்டு உள்ளார் என்கிறார்கள்.
அவருக்கு முட்டியில் இந்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் எதிர்நீச்சல் தொடரில் வரும் நாட்களில் இவர் நடிப்பது குறையும் என்கிறார்கள். பெரும்பாலும் இவர் அமர்ந்து இருப்பது போன்ற காட்சிகள் இனி வைக்கப்படும். ஆனால் அதுவும் கூட குறைந்த அளவிலேயே வைக்கப்படும்.
மற்றபடி இவர் பெரும்பாலான காட்சிகள் இனி தோன்ற மாட்டார். கொஞ்சம் கொஞ்சமாக இவருக்கான காட்சிகள் குறையும். அவர் முழுமையாக குணமடைந்த பின் மீண்டும் தொடரில் நடிப்பார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவர் ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு காலில் கட்டுட்டன் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ALSO READ | அடித்து தூக்கும் சிம்பு.. கலக்கும் பத்து தல.. புதிய வரலாறு படைக்க போகிறதாமே!