Friday, January 28, 2022
Homeசினிமாமலையாள திரையுலகிலும் போதைப்பொருள் புழக்கம் இருக்கிறது - பிரபல நடிகை தந்தை அதிரடி

மலையாள திரையுலகிலும் போதைப்பொருள் புழக்கம் இருக்கிறது – பிரபல நடிகை தந்தை அதிரடி

பாலிவுட் மற்றும் கன்னட திரையுலகில் போதைப்பொருட்கள் பயன்படுத்தியதாக கூறி ரியா சக்ரபோர்த்தி, ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இந்த சம்பம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் போதைப்பொருள் புழக்கம் பற்றி தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. பரபரப்பான சூழலில் இந்த விவகாரத்தில் மேலும் பல பிரபலங்கள் இதில் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் மலையாள திரையுலகிலும் போதைப்பொருள் பயன்பாடு இருக்கிறது என தயாரிப்பாளரும் நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தையுமான சுரேஷ்குமார் கூறியதாகதகவல் வெளியாகி உள்ளது.

மலையாள திரையுலகிலும் போதை பொருட்கள் புழக்கம் இருக்கத்தான் செய்கிறது. படப்பிடிப்பு சமயங்களில் சில புரோடக்ஷன் உதவியாளர்களே எங்களிடம் கேரவனுக்குள்ளேயே நுழைய முடியவில்லை.. அந்த அளவுக்கு வாடை அடிக்கிறது என அடிக்கடி கூறிய இருக்கின்றனர் என அவர் கூறியதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

- Advertisment -

Most Popular

Recent Comments