இயக்குனர் ஹரி(Director Hari) மீண்டும் போலீஸ் படம் எடுக்க உள்ளார். அவரின் இந்த படத்தில் முன்னணி ஹீரோ ஒருவர் நடிக்க உள்ளார்.
சாமி, சாமி 2, சிங்கம் 1, சிங்கம் 2, சிங்கம் 3 என்று போலீஸ் படங்களை எடுத்தவர் இயக்குனர் ஹரி. வேகமான திரைக்கதையுடன் இவர் பல்வேறு படங்களை எடுத்துள்ளார். கடைசியாக இவர் எடுத்த யானை படம் பெரிதாக ஓடவில்லை.
ஆனாலும் படம் மிக மோசமாகவும் இல்லை. குடும்பத்துடன் பார்க்கும் அளவிற்கு யானை படம் இருந்தது. இந்த நிலையில்தான் இயக்குனர் ஹரி மீண்டும் போலீஸ் படம் எடுக்க உள்ளார். அவரின் இந்த படத்தில் முன்னணி ஹீரோ விஷால்(Vishal) நடிக்க உள்ளார்.
விஷால் பொதுவாக போலீஸ் படங்களில் அதிக ஆர்வம் காட்ட கூடியவர். சமீபத்தில் கூட அவர் லத்தி என்ற படத்தில் நடித்தார். இந்த படம் சரியாக ஓடவில்லை. படத்தில் காட்சிகள் கடுமையான விமர்சனங்களுக்கும் உள்ளது.
இந்த நிலையில்தான் தற்போது ஹரி இயக்கத்தில் போலீஸ் கதையில் படம் எடுக்க உள்ளார். இதற்கு முன் பூஜை, தாமிரபரணி ஆகிய படங்களை ஹரி இயக்கத்தில் விஷால் நடித்து இருக்கிறார். அந்த இரண்டு படங்களும் நன்றாக ஓடிய படங்கள் ஆகும்.
இதனால் மீண்டும் இவர்கள் ஜோடி இணைய உள்ளது. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் நடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறதாம். மீண்டும் ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்தில் இணைய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன.