போதைப்பொருள் தடுப்பு பிரிவு நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பிய நிலையில், பாலிவுட் நடிகை தீபிகா படுகோண் மேலாளர் கரிஷ்மா பிரகாஷ் தொடர்ந்து தலைமறைவாக இருக்கிறார்.
நேரில் ஆஜராகாமல் இருப்பது மற்றும் பதில் அளிக்காத காரணத்தால் போதைப்பொருள் தடுப்பு பிரிவு கவாண் ஊழியர்களிடம் நோட்டீஸ் அனுப்பு உள்ளது.
கடந்த வாரம் கரிஷ்மா பிரகாஷ் வீட்டில் தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு சோதனை நடத்தி 1.7 கிராம் போதை பொருள் மற்றும் சிபிடி எண்ணையை மீட்டனர். பாலிவுட் போதை பொருள் விசாரணையின் போது கரிஷ்மா பிரகாஷ் மீது சந்தேகம் எழுந்தது.
இதன் காரணமாக கடந்த ஒரு மாதமாக தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு நோட்டீஸ் அனுப்பி வருகிறது. மேலும் விசாரணையில் கலந்து கொள்ளவும் கேட்டுக் கொண்டுள்ளது. எனினும், இவர் இதுவரை நேரில் ஆஜராகவில்லை.