Monday, May 29, 2023
Homeசினிமாசினிமா செய்திகள்பாக்கியலட்சுமி சீரியலில் இனி கோபி நடிக்க மாட்டாரா? ரஞ்சித் தானா? உண்மை என்ன?

பாக்கியலட்சுமி சீரியலில் இனி கோபி நடிக்க மாட்டாரா? ரஞ்சித் தானா? உண்மை என்ன?

சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் இனி கோபி நடிக்க மாட்டார் என்று சில ஊடகங்களில், சமூக வலைத்தளங்களில் செய்திகள் வர தொடங்கி உள்ளன.

பாக்கியலட்சுமி சீரியல் மூலம் கவனம் ஈர்த்தவர் கோபி. இவர் வில்லத்தனமாக நடிக்கும் காட்சிகள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளன. இரண்டு மனைவிகளை இவர் சமாளிக்கும் விதம் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில்தான் பாக்கியலட்சுமி சீரியலில் இனி அதிகம் வர மாட்டேன். எனக்கும் வயதாகிக்கொண்டே செல்கிறது. எனக்கு கொஞ்சம் ஓய்வு தேவை என்று கோபி தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் தற்போது சீரியலில் ரஞ்சித் நடிக்க தொடங்கி உள்ளார். நடிகர் ரஞ்சித் சீரியலில் முக்கிய கதாபாத்திரமாக மாற தொடங்கி உள்ளார். அவரின் வருகையால் கதை புதிய டிராக்கில் செல்ல தொடங்கி உள்ளது.

இந்த நிலையில்தான் பாக்கியலட்சுமி சீரியலில் இனி கோபி நடிக்க மாட்டார் என்று சில ஊடகங்களில், சமூக வலைத்தளங்களில் செய்திகள் வர தொடங்கி உள்ளன. ரஞ்சித் வந்ததால் இனி கோபி இருக்க மாட்டார் என்று சிலர் கூற தொடங்கி உள்ளனர்.

ஆனால் அதில் உண்மை கிடையாது. ரஞ்சித் வரும் கதை தனி டிராக்கில் இனி செல்லும். கோபி வரும் பகுதி தனியாக செல்லும். இருவரும் சந்தித்துக்கொள்ளும் காட்சிகளும் எதிர்காலத்தில் வரும். ஆனால் கோபி வரும் காட்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். அவருக்கு ஓய்வு தேவை என்பதால் காட்சிகள் அதிகம்இருக்காது . ஆனால் அவர் சீரியலில்தான் இருப்பார் என்று கூறப்படுகிறது.