Monday, May 29, 2023
HomeசினிமாHeroesபழைய லவ் பெயிலியரா? இளம் பெண்ணை மணக்கும் அசோக் செல்வன்.. யார் தெரியுமா?

பழைய லவ் பெயிலியரா? இளம் பெண்ணை மணக்கும் அசோக் செல்வன்.. யார் தெரியுமா?

சென்னை: பாடகி ஒருவரை காதலித்து வந்த நடிகர் அசோக் செல்வன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் அசோக் செல்வன் இளம் வளர்ந்து வரும் நடிகர். இவர் தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்களில் நடித்து வருகிறார். இவர் சூத்து கவ்வும் படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆனார். அதன்பின் இவர் நடித்த தெகிடி படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

அதை தொடர்ந்து இவர் நடித்த பெரும்பாலான படங்கள் ஓடவில்லை. மனிதர்கள், மன்மதலீலை, ஹாஸ்டல், வேழம் போன்ற படங்கள் வரிசையாக பிளாப் ஆனது. இதையடுத்து கொஞ்சம் பிரேக் எடுத்து மீண்டும் வந்தவர் நித்தம் ஒரு வானம் படத்தில் நடித்தார்.

இந்த படம் ஹிட் ஆனது. இதையடுத்து விட்ட மார்க்கெட்டை மீண்டும் அவர் பிடித்துள்ளார். தற்போது இவர் 2-3 படங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. பாடகி ஒருவரை காதலித்து வந்த நடிகர் அசோக் செல்வன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்த பாடகி ஒரு பிரபல சேனலில் பாடி வந்தவர். இவர்கள் இருவரும் காதலித்து நெருக்கமாக இருந்தனர். ஆனால் வேறு சில காரணங்களுக்காக இவர்கள் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து  நடிகர் அசோக் செல்வன் பிரபல தயாரிப்பாளரின் மகளை காதலித்து வருகிறாராம். அவர்களின் வீட்டில் இதை சொல்லி ஒப்புக்கொள்ள வைத்து இருக்கிறாராம்.

விரைவில் இவர்களுக்கு இடையில் திருமணம் நடக்கும் என்றும் கூறப்படுகிறது.

ALSO READ | இவருக்கு 4வது திருமணம்.. அவருக்கு 3வது திருமணம்.. பிரபல நடிகையின் முடிவு.. 1500 கோடி ரூபாயா?